சிக்கன் க்ளியர் சூப் (ரெஸ்ட்டாரண்ட் ஸ்டைலில்)

சிக்கன் க்ளியர் சூப் (ரெஸ்ட்டாரண்ட் ஸ்டைலில்)
சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில் கடாய் வைத்து 750மில்லி தண்ணீர் சேர்த்து எலும்புகள் இல்லாத சிக்கன், மிளகு, சீரகம், நாலாக நறுக்கிய ஒரு வெங்காயம், தட்டிய பூண்டு பற்கள்,இஞ்சி சேர்த்து கொதிக்க வைக்கவும். உப்பு தேவைக்கேற்ப சேர்த்து கொள்ளவும்.
- 2
சிக்கன் நன்றாக கொதித்து வெந்ததும் எடுத்து வடிகட்டி கொள்ளவும். பின் சிக்கன் துண்டுகளை எடுத்து சின்னச்சின்னதாக பிச்சுக்கொள்ளவும்.வடித்த தண்ணீரை தனியாக எடுத்து கொள்ளவும்.
- 3
பின் அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய பச்சை மிளகாய், துருவிய இஞ்சி, பூண்டு,சேர்த்து வதக்கவும்.
- 4
பிறகு துருவிய கேரட் சேர்த்து வதக்கவும். உப்பு தேவைக்கேற்ப சேர்த்து கொள்ளவும். பின் வேகவைத்து பிச்சிவைத்திருந்த சிக்கன் வெங்காயம், பூண்டு பற்களை சேர்க்கவும். மிளகு, சேர்க்கவும்.
- 5
பின் வடிகட்டி வைத்திருந்த தண்ணீரை சேர்த்து கொதிக்க விடவும். தக்காளி விழுது, ரெட்சில்லி சாஸ்,மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
- 6
நன்றாக கொதித்ததும் சோளமாவை தண்ணீரில் கரைத்து சேர்த்து கிளறி விடவும். முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து கிளறி விடவும்.
- 7
தேவைக்கேற்ப உப்பு மிளகு தூள் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும். எலுமிச்சை சாறு, கொத்தமல்லிதழை சிறிதளவு சேர்த்து பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes




கமெண்ட் (4)