ஸ்பைஸி எக் ட்ராப் சிக்கன் சூப் (spicy egg drop chicken soup)

ஸ்பைஸி எக் ட்ராப் சிக்கன் சூப் (spicy egg drop chicken soup)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பத்தரத்தில் தண்ணீர், உப்பு, பிரிஞ்சி இலை, இஞ்சி, பூண்டு, வெங்காயம், சிக்கன், எலும்பு இருந்தால் அத்தனையும் சேர்க்கவும் அதனை மூடி போட்டு 30நிமிடம் வேகவிடவும்
- 2
அதனை வடிகட்டவும் பின் சிக்கன் துண்டுகளை மெல்லிசாக பித்து வைக்கவும்
- 3
ஒரு பத்தரத்தில் எண்ணெய் விட்டு அதில் நறுக்கிய இஞ்சி, வெங்காயத்தாள் பல்ப் நறுக்கியது, கேரட் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 4
அத்துடன் சிக்கன் வேகவைத்த தண்ணீர் மற்றும் பித்து போட்ட சிக்கன் சேர்த்து வேகவிடவும்
- 5
அத்துடன் வினிகர், சோயா சாஸ், டொமட்டோ சாஸ், ரெட் சில்லி சாஸ், மிளகு தூள் சேர்த்து மூடி வைத்து 5நிமிடம் கொதிக்கவிடவும்
- 6
அத்துடன் வெங்காயத்தாள் சேர்க்கவும் ஒரு பத்தரத்தில் 1டேபிள் ஸ்பூன் சோளமாவுடன் 2டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கலந்து அந்த சூப்புடன் சேர்க்கவும்
- 7
ஒரு முட்டையின் வெள்ளை ஐ தனியாக பிரித்து எடுக்கவும் அதனை நன்றாக அடித்து சூப்புடன் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலந்துவிடவும்
- 8
வெங்காயத்தாள் மற்றும் சிறிது கற்பூரவள்ளி காய்ந்த இலை சேர்த்து அடுப்பை அணைக்கவும்
- 9
சுவையான ஸ்பைஸி எக் ட்ராப் சிக்கன் சூப் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes















கமெண்ட் (4)