வெள்ளை சாதம் பொட்டுக்கடலை முறுக்கு (white rice murukku)

#leftover
மீந்துபோன சாதத்தை வீணாக்காமல் இப்படி முறுக்கு செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
வெள்ளை சாதம் பொட்டுக்கடலை முறுக்கு (white rice murukku)
#leftover
மீந்துபோன சாதத்தை வீணாக்காமல் இப்படி முறுக்கு செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
வெள்ளை சாதத்தை மிக்ஸியில் அரைத்து எடுத்து கொள்ளவும். ஒரு பவுலில் அரைத்த சாதத்தையும்,பொட்டுக்கடலை மாவு, உளுந்து மாவு சீரகம்,ஓமம், உப்பு தேவைக்கேற்ப சேர்த்து பிசறி கொள்ளவும்.
- 2
நெய்யை சூடுபடுத்தி மாவில் சேர்த்து பிசைந்து கொள்ளவும். பின் அரிசி மாவு, சோளமாவு சேர்த்து மிதமான சூட்டில் எண்ணெய் சேர்த்து முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
- 3
முறுக்கு குழலில் சேர்த்து பிழிந்து கொள்ளவும். முறுக்காகவும்,காராச்சேவாகவும் பிழிந்து கொள்ளவும்.
- 4
அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிழிந்து வைத்திருந்த முறுக்கை சேர்த்து பொரித்து எடுக்கவும். அடுப்பை சிம்மில் வைத்து செய்யவும்.
- 5
சுவையான வெள்ளை சாதம் முறுக்கு ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட் (4)