Tirumala Vadai (Tirumala vadai recipe in tamil)

#ap திருப்பதி திருமலை என்றாலே நமக்கு ஞாபகம் வருவது லட்டு. ஆனால் திருப்பதியில் லட்டு எவ்வளவு பிரபலமோ அதே அளவு இந்த வடையும் பிரபலம். சாமிக்கு தினமும் இந்த வடையை நெய்வேதியமாக வைப்பர். இந்த வடை உளுந்து வடை போல் மிருதுவாக இல்லாமல் கரகரப்பாக இருக்கும். கருப்பு உளுந்தில் செய்யப்படும் இந்த வடை மிகவும் சுவையாகவும், க்ரிஸ்பி ஆக இருக்கும். இந்த வடை என் பெற்றோருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.

சமையல் குறிப்புகள்
- 1
கருப்பு உளுந்தை நன்கு அலம்பி 10 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறவைத்த உளுந்தை தண்ணீர் வடித்து, துளிகூட தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.
- 2
மிளகு மற்றும் சீரகத்தை உப்பு சேர்த்து நன்கு நசுக்கி வைக்கவும்.
- 3
அரைத்த உளுந்து மாவில் இடித்து வைத்துள்ள சீரகம் மிளகு மற்றும் உப்பு தூள் சேர்த்து நன்கு பிசைந்து, ஒரு துணியில் உளுந்து மாவை உருண்டையாக உருட்டி மிகவும் கம்மியாக தண்ணீர் தொட்டு வடை போல் தட்டவும்.
- 4
எண்ணெயை நன்கு காயவைத்து மிதமான தீயில் தட்டிய வடையை இரண்டு பக்கமும் திருப்பி திருப்பி விட்டு நன்கு வேகவைத்து எடுக்கவும். ஒரு வடை வேக ஏறத்தாழ பதினைந்து நிமிடம் ஆகும். எண்ணெயில் சலசலப்பு அடங்கிய பின் அதிலிருந்து எடுக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
- கோங்குரா தாளிம்பு (Gonkura thaalimbu recipe in tamil)
- கேரளா ஸ்டைல் உருளைக்கிழங்கு கேர்ரி (Urulaikilanku curry recipe in tamil)
- ஆந்திர ட்ரை கோபி மஞ்சுரியன் (Andhra dry gobi manchoorian recipe in tamil)
- பொட்லகாய வேப்புடு காரம் (snake gourd spicy fry) (Potlakaaya veppudu kaaram recipe in tamil)
- உளுந்து மிளகுசீரகம் வடை போண்டா (Ulunthu bonda recipe in tamil)

கமெண்ட் (7)