வல்லாரைக் கீரை ஆம்லெட் (Vallaarai Keerai Omelette)
வல்லாரைக் கீரை ஆம்லெட் (Vallaarai Keerai Omelette)
சமையல் குறிப்புகள்
- 1
வல்லாரை கீரையை கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பிறகு கேரட்,வெங்காயம்,தக்காளி, இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.இரண்டு பச்சை மிளகாய் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாய்,கேரட் இவற்றை சேர்த்து வதக்கவும். பிறகு வல்லாரைக் கீரையை சேர்த்து வதக்கவும்.அதற்கு தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இதை ஒரு மூன்று நிமிடம் நன்றாக வதக்கவும் அதன்பிறகு நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும். இவற்றை லேசாக வதக்க வேண்டும்.
- 3
ஒரு பாத்திரத்தில் மூன்று முட்டையை எடுத்து உடைத்துக் கொள்ளவும்.வதக்கி வைத்ததை கொட்டவும்.இதற்கு தேவையான உப்பு சேர்த்து நன்றாக முட்டையைஅடித்துக் கொள்ளவும்.ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைக்கவும். கல் காய்ந்ததும் முட்டையை ஒரு கரண்டியில் எடுத்து ஊற்றவும். அதன் மேல் நறுக்கிய தக்காளி, கருவேப்பிலை,கொத்தமல்லி தழைகளை சிறிது சேர்க்கவும்.சுத்தி எண்ணைய் ஊற்றவும்.அதன்மேல் மிளகு, சீரகத்தூள் சேர்க்கவும் வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.
- 4
இப்பொழுது சுவையான வல்லாரை கீரைஆம்லெட் ரெடி...
Keywords
Similar Recipes
More Recipes













கமெண்ட்