சமையல் குறிப்புகள்
- 1
வாழைக்காயின் இரண்டு ஓரங்களையும் வெட்டி, பிறகு வாழைக்காயை இரண்டாக வெட்டி தண்ணீரில் சிறிது உப்பு சேர்த்து அரை பதத்திற்கு வேக வைக்கவும் (பார்க்கும்போது வாழைக்காயை தோல் சற்று கருத்தும் உள்ளே இளம் மஞ்சள் நிறத்திலும் இருக்கும் அவ்வாறு இருந்தால் போதும் 1/2 பதத்தில் வேக வைக்கவேண்டும் முழுவதும் வெந்து விட்டால் பொடிமாஸ் செய்யும் பொழுது குழைத்து விடும்)
- 2
பிறகு வாழைக்காயை குளிர் நீரில் 5 நிமிடம் வைத்து பிறகு வாழைக்காயின் தோலை நீக்கி படத்தில் காட்டியவாறு துருவிக்கொள்ளவும்... மற்றொரு வாணலியில் எண்ணை விட்டு எண்ணை சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து பொறிக்கவும், பிறகு இதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்
- 3
பிறகு துருவிய வாழைக்காய் சேர்த்து மிதமான தீயில் ஒரு நிமிடம் நன்றாக வதக்கவும் பிறகு இதில் மஞ்சள்தூள் உப்பு சரிபார்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து 2 நிமிடம் நன்றாகக் கிளறி குறைந்த தீயில் 2 நிமிடம் மூடி வைக்கவும்
- 4
இறுதியாக மிளகுத்தூள் சேர்த்து ஒரு முறை கிளறவும் பிறகு கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும் (இது செய்யும்பொழுது பார்ப்பதற்கு சற்று குழைத்தது போலவே தெரியும் ஆனால் முழுவதும் செய்து முடித்து 5 நிமிடம் கழித்து உதிரி உதிரியாக வந்து விடும் அதனால் செய்யும்பொழுது குழைத்து விட்டது என நினைக்க வேண்டாம்)
- 5
சுவையான வாழைக்காய் பொடிமாஸ் தயார்... குழந்தைகள் உண்பதால் இதில் நான் பச்சைமிளகாய், வரமிளகாய் சேர்க்கவில்லை நீங்கள் உங்கள் காரத்திற்கேற்ப பச்சை மிளகாய், வர மிளகாய் சேர்த்துக் கொள்ளலாம்
Similar Recipes
-
-
வாழைக்காய் பொடிமாஸ்
#மதிய உணவுகள்மதியம் சாம்பார் அல்லது ரசத்துடன் சாப்பிட ஏற்ற காய் இது. எப்போதும் வாழைக்காய் ப்ரை செய்வதற்கு பதிலாக ஒரு மாற்று. Sowmya Sundar -
-
-
வாழைக்காய் பொடிமாஸ் (Vaazhaikkaai podimass recipe in tamil)
மிகவும் சுவையான பொடிமாஸ் காரக்குழம்பு உடன் சேர்த்து சாப்பிட ஏற்றது.. Raji Alan -
-
-
-
-
-
-
-
-
-
-
-
வாழைக்காய் ப்ரைட் ரைஸ்
#banana இந்த ரைஸ் நான் வாழைக்காய் வைத்து செய்தேன் மிக அருமையாக இருந்தது... Muniswari G -
-
-
-
-
-
-
செட்டிநாடு வாழைக்காய் மீன் வறுவல் (Chettinadu vaazhaikaai meen varuval recipe in tamil)
#Ga4/banana/week2இது சைவ செட்டிநாட்டு மீன் வறுவல் Lakshmi -
-
-
-
-
வாழைக்காய் வடை (Vaazhaikaai vadai recipe in tamil)
#GA4#week2எதிர் பாராமல் விருந்தினர் வரும் போது அல்லது மாலை நேரத்தில் டீயோடு சுவைக்க ஏற்றது வாழைக்காய் வடை. சூடாக சாப்பிடும் போது மிகவும் சுவையாக இருக்கும். Natchiyar Sivasailam -
More Recipes
கமெண்ட் (9)