வல்லாரைக் கீரை ஆம்லெட் (Vallaarai Keerai Omelette)

Nithya Sharu
Nithya Sharu @nithya_20

#GA4
#Week2
#Omelette with Spinach

வல்லாரைக் கீரை சாப்பிட்டால் ஞாபக சக்தி அதிகமாகும் .நமது உடலில் நரம்புகளை பலப்படுத்தும் மூளை மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட உதவும் .அதனால் கீரை சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்த மாதிரி முட்டையில் சேர்த்து ஆம்லெட் ஆகக் கொடுக்கலாம்.

வல்லாரைக் கீரை ஆம்லெட் (Vallaarai Keerai Omelette)

#GA4
#Week2
#Omelette with Spinach

வல்லாரைக் கீரை சாப்பிட்டால் ஞாபக சக்தி அதிகமாகும் .நமது உடலில் நரம்புகளை பலப்படுத்தும் மூளை மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட உதவும் .அதனால் கீரை சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்த மாதிரி முட்டையில் சேர்த்து ஆம்லெட் ஆகக் கொடுக்கலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
4 பேர்
  1. 3 முட்டை
  2. வல்லாரைக் கீரை
  3. ஒரு கேரட்
  4. இரண்டு பெரிய வெங்காயம்
  5. ஒரு தக்காளி
  6. இரண்டு பச்சை மிளகாய்
  7. கறிவேப்பிலை சிறிதளவு
  8. கொத்தமல்லித்தழை சிறிதளவு
  9. தேவையான அளவு உப்பு
  10. ஒரு டேபிள்ஸ்பூன் மிளகுத்தூள்
  11. ஒரு டேபிள்ஸ்பூன் சீரகத்தூள்
  12. தேவையான அளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    வல்லாரை கீரையை கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பிறகு கேரட்,வெங்காயம்,தக்காளி, இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.இரண்டு பச்சை மிளகாய் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

  2. 2

    வாணலியில் எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாய்,கேரட் இவற்றை சேர்த்து வதக்கவும். பிறகு வல்லாரைக் கீரையை சேர்த்து வதக்கவும்.அதற்கு தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இதை ஒரு மூன்று நிமிடம் நன்றாக வதக்கவும் அதன்பிறகு நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும். இவற்றை லேசாக வதக்க வேண்டும்.

  3. 3

    ஒரு பாத்திரத்தில் மூன்று முட்டையை எடுத்து உடைத்துக் கொள்ளவும்.வதக்கி வைத்ததை கொட்டவும்.இதற்கு தேவையான உப்பு சேர்த்து நன்றாக முட்டையைஅடித்துக் கொள்ளவும்.ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைக்கவும். கல் காய்ந்ததும் முட்டையை ஒரு கரண்டியில் எடுத்து ஊற்றவும். அதன் மேல் நறுக்கிய தக்காளி, கருவேப்பிலை,கொத்தமல்லி தழைகளை சிறிது சேர்க்கவும்.சுத்தி எண்ணைய் ஊற்றவும்.அதன்மேல் மிளகு, சீரகத்தூள் சேர்க்கவும் வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

  4. 4

    இப்பொழுது சுவையான வல்லாரை கீரைஆம்லெட் ரெடி...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nithya Sharu
Nithya Sharu @nithya_20
அன்று

Similar Recipes