சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க விட வேண்டும். பாலானது கொதிக்க ஆரம்பித்ததும் அதில் எலுமிச்சை சாறு சேர்த்து பால் நன்கு தெரியும் வரை தொடர்ந்து கிளறி விட வேண்டும்.
- 2
பாலில் இருந்து தண்ணீர் முற்றிலும் பிரிந்ததும் அடுப்பை அணைத்து பின் பாலில் ஐஸ் கட்டிகளை சேர்த்து ஐஸ் கட்டிகளை உருக வைக்கவும்.
- 3
ஐஸ் கட்டிகள் முற்றிலும் உருகியதும் அதனை மஸ்லின் துணியில் ஊற்றி அதில் உள்ள நீரை முற்றிலும் வடிகட்டி ஓடும் நீரில் மஸ்லின் துணியில் உள்ள திரிந்த பாலை எலுமிச்சை வாசனை முற்றிலும் போகும் வரை நன்கு கழுவ வேண்டும்.
- 4
பின் அதில் உள்ள நீரை வடித்து 30 நிமிடம் தனியாக வைக்க வேண்டும் பின்பு மஸ்லின் துணியில் உள்ள அந்த திரிந்த பாலை ஒரு தட்டில் போட்டு அதனை பிசைய வேண்டும்.
- 5
பிறகு அதனை சிறு உருண்டைகளாக பிரித்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
- 6
பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சர்க்கரை ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு சர்க்கரை கரையும் வரை கொதிக்க விட வேண்டும்.
- 7
சர்க்கரை நீரானது ஓரளவு கெட்டியான பின் அதில் உருட்டி வைத்துள்ள கைபோட்டு குறைவான தீயில் 3 நிமிடம் வேக வைக்கவும்.
- 8
பின் மிதமான தீயில் 10 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும் முக்கியமாக இந்நேரத்தில் மூன்று நிமிடத்திற்கு ஒருமுறை மூடியை திறந்து பார்க்க வேண்டும்.
- 9
இறுதியில் அதனை இறக்கி குளிர வைத்து அதன்மேல் பிஸ்தாவை தூவினால் ரசகுல்லா ரெடி
Keywords
Similar Recipes
More Recipes



கமெண்ட் (5)