மில்க் சாக்லேட் கேக் (Milk chocolate cake recipe in tamil)
Nazeema Banu @cook_16196004
மில்க் சாக்லேட் கேக் (Milk chocolate cake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவை சலித்து அதனுடன் சர்க்கரை பவுடர் பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து வைக்கவும்.
- 2
பட்டரை தனியே கலக்கி அதில் வெனிலா எசன்ஸ் சேர்க்கவும்
- 3
அதில் மாவுக்கலவையை சேர்த்து கலக்கி அதில் சிறிதுசிறிதாக பாலை சேர்த்து கலக்கவும்
- 4
ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் தடவி கலவையை அதில் ஊற்றி காற்று இல்லாதவாறு பாத்திரத்தை தட்டி வைக்கவும்.
- 5
கனமான பாத்திரத்தை சூடேற்றி அதில் ஸ்டாண்டு ஒன்று வைத்து மூடி சூடேற்றவும்.
- 6
அதனுள் கேக் கலவை உள்ள பாத்திரத்தை வைத்து மிதமான தீயில் முப்பது நிமிடங்கள் வரை பேக் செய்யவும்.
- 7
பாத்திரத்தை திறந்து ஒரு குச்சியால் கேக் வெந்து விட்டதா என பார்த்து எடுத்து ஆற வைக்கவும்.
- 8
டார்க் சாக்லேட்டை டபுள் பாயில் முறையில் உருக்கி கேக் மேலே ஊற்றவும்.
- 9
அதன் மேல் சாக்லேட் உருண்டைகள்..க்ரீம் பிஸ்கட் வைத்து அலங்கரிக்கவும்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13736758












கமெண்ட்