சைவ முட்டை பொரியல் (Saiva muttai poriyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அரை லிட்டர் பாலை காய வைத்து கொதி வந்ததும் அதில் ஒரு எலுமிச்சம் பழச் சாற்றை ஊற்றவும் கொதிக்க விட்டால் பால் திரண்டு வரும்.. திரண்ட பாலை ஒரு வெள்ளைத் துணியில் ஊற்றி வடிகட்டி சாறு பிழிந்து வைத்துக் கொள்ளவும்.பிறகு அதனை 10 நிமிடம் நன்கு சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்து உதிரியாக உதிர்த்து வைத்துக் கொள்ளவும்... பன்னீர் தயார்..
- 2
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும் வதங்கியதும் மிளகாய்த்தூள் மல்லித்தூள் கரம் மசாலா மஞ்சள் தூள் உப்பு ஆகியவை சேர்த்து நன்கு வதக்கவும்...வதங்கியதும் உதிர்த்து வைத்த பன்னீரை சேர்த்து நன்கு கிளறி இறக்கினால் மிகவும் சுவையான பன்னீர் பொடிமாஸ் தயார்...
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13742937









கமெண்ட் (3)