பால் வெங்காயத்தாள் பருப்பு கூட்டு (Spring onion milk moongdal curry recipe in tamil)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

வெங்காயத்தாள் சத்துக்கள் நிறைந்தது. அத்துடன் பாசிப்பருப்பு, பால் சேர்த்து செய்த இந்த கூட்டு மிகவும் சுவையாக இருந்தது.
#cookwithmilk

பால் வெங்காயத்தாள் பருப்பு கூட்டு (Spring onion milk moongdal curry recipe in tamil)

வெங்காயத்தாள் சத்துக்கள் நிறைந்தது. அத்துடன் பாசிப்பருப்பு, பால் சேர்த்து செய்த இந்த கூட்டு மிகவும் சுவையாக இருந்தது.
#cookwithmilk

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
  1. 1/4 கப் பாசி பயறு
  2. 1/2 கப் நறுக்கிய வெங்காயத்தாள்
  3. 1/2 கப்பால்
  4. விழுது அரைப்பதற்கு :
  5. 1/4 தேங்காய் துருவல்
  6. 3பச்சை மிளகாய்
  7. 1/2 டீஸ்பூன் சீரகம்
  8. 2 டேபிள் ஸ்பூன் பால்
  9. தாளிக்க :
  10. 1டீஸ்பூன் எண்ணை அல்லது நெய்
  11. 1/4 டீஸ்பூன்கடுகு
  12. 1/4 டீஸ்பூன்சீரகம்
  13. 1/4 டீஸ்பூன் உளுந்துப்பருப்பு
  14. 1வற்றல்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    பாசிப்பயறு நன்கு வறுத்து எடுத்து, ஆறியவுடன் தண்ணீரில் நன்கு கழுவி, குக்கரில் இரண்டு விசில் வைத்துக்கொண்டு எடுக்கவும்.

  2. 2

    மிக்ஸி ஜாரில் தேங்காய், பச்சை மிளகாய், சீரகம், பால் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

  3. 3

    அரைத்த விழுதை, வேக வைத்து வைத்துள்ள பருப்பில் சேர்க்கவும். கால் கப் பால், உப்பு கலந்து வேகவிடவும்.

  4. 4

    பருப்பு, விழுது வேகும் நேரம் வெங்காயத்தாளை சுத்தம் செய்து நறுக்கி வைத்துக்கொள்ளவும்.தாளின் அடிப்பாக வெங்காயத்தை தனியாக நறுக்கி வைக்கவும்.

  5. 5

    கடாயை ஸ்டவ்வில் வைத்து, நெய் சேர்த்து சூடானதும், சீரகம், வற்றல், நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தாளின் அடிப்பாக வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.பின் எல்லா தாளையும் சேர்த்து வதக்கி வேகும் பருப்பில் சேர்க்கவும்.

  6. 6

    ஐந்து நிமிடங்கள் வெந்தவுடன் நன்கு கலந்து உப்பு சரிபார்த்து பரிமாறும் பௌலுக்கு மாற்றி, கடுகு, சீரகம், உளுந்து, வற்றல் தாளித்து சேர்த்து, கொஞ்சம் நறுக்கிய தாளை தூவி அலங்கரிக்கவும்.இப்போது பால் வெங்காயத்தாள் கூட்டு தயார்.

  7. 7

    இந்த சுவையான கூட்டு சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes