பூந்தி லட்டு

பூந்தி லட்டு குறைந்த அளவு நெய்யில் எண்ணெய் சேர்க்காமல் ருசியாக சுலபமாக எப்படி செய்வது என்று பார்ப்போம்
#deepavali
பூந்தி லட்டு
பூந்தி லட்டு குறைந்த அளவு நெய்யில் எண்ணெய் சேர்க்காமல் ருசியாக சுலபமாக எப்படி செய்வது என்று பார்ப்போம்
#deepavali
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அரை கப் கடலை பருப்பை கழுவி தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்
- 2
பின்னர் தண்ணீரை வடிகட்டி கடலை பருப்பை மிக்ஸியில் போட்டு அரைக்கவும்
- 3
ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி அதில் ஒரு ஸ்டாண்ட் வைக்கவும், அதன் மேல் ஒரு தட்டில் எண்ணெய் தடவி அதில் அரைத்த கடலை பருப்பை சிறிய துண்டுகளாக வைத்து பத்து நிமிடம் ஆவியில் வேக வைக்கவும்.
- 4
வெந்தவுடன் அதை ஆறவிடவும். ஆரிய பின் அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்கவும்
- 5
இப்பொழுது ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி அதில் உடைத்த முந்திரி மற்றும் பாதாம் சேர்ந்து வறுத்து எடுத்து வைக்கவும்
- 6
அதே கடாயில் அரைத்த கடலை பொடியை சேர்த்து ஒரு நிமிடம் வறுத்து எடுக்கவும். வறுத்த பிறகு பூந்தி பதத்திற்கு வந்து விடும்
- 7
கடாயில் அரை கப் பொடித்த கல் கண்டு மற்றும் அரை கப் தண்ணீர் சேர்த்து கரைய விடவும்
- 8
கரைந்ததும் அதில் ஏலக்காய் பொடி மற்றும் மஞ்சள் கலர் பொடி அரை டீஸ்பூன் சேர்த்து கிண்டவும். பின்னர் அதில் பூந்தியை சேர்த்து கிண்டவும்
- 9
பின்னர் அடுப்பை அணைத்து ஒரு பத்து நிமிடம் மூடி வைக்கவும்.
- 10
இப்பொழுது அதில் வருத்தெடுத்த முந்திரி பாதாம் சேர்த்து கிண்டவும்
- 11
கையில் நெய் சிறிது தடவி லட்டுகளை பிடித்து ஒரு தட்டில் வைக்கவும்
- 12
சுவையான பூந்தி லட்டு தயார். சுவைத்து மகிழுங்கள்
Similar Recipes
More Recipes



























கமெண்ட் (2)