Cham cham & Rasgulla gujarati sweets (Cham cham & Rasagulla recipe in tamil)

Cham cham & Rasgulla gujarati sweets (Cham cham & Rasagulla recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் பால் சேர்த்து பொங்கி வரும் பொழுது தயிர் சேர்த்து திரிய வைக்கவும்
- 2
பன்னீரை வடிகட்டி குளிர்ந்த நீரை மேலே ஊற்றவும். பின் நன்றாக கையால் அழுத்தி விடவும் தண்ணீர் நன்றாக வடிய வேண்டும்.
- 3
பின் பன்னீரை ஒரு தட்டில் கொட்டி ஆறியதும் மைதா மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து உள்ளங்கையால் நன்கு தேய்க்கவும்.
- 4
நன்கு தேய்த்த பனீரை சிலிண்டர் வடிவில் மற்றும் உருண்டையாக உருட்டவும்
- 5
கடாயில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். இரண்டு நிமிடம் கொதிக்க வைத்து உருண்டைகளாக பிடித்த பனீரை சேர்க்கவும்
- 6
குறைந்த தீயில் வைத்து 10 நிமிடம்மூடி வைத்து வேக வைக்கவும்.
- 7
10 நிமிடத்திற்கு பிறகு மீண்டும் லேசாக பாத்திரத்தைக் குலுக்கி பத்து நிமிடம் திரும்பவும் வேக வைக்கவும்.உருண்டைகள் பெரிய அளவில் வெந்து இருக்கும்.இதை ஆற விடவும்.rasgulla ரெடி.
- 8
ஸ்டப்பிங் செய்ய மற்றொரு கடாயில் நெய் விட்டு அதனுடன் பால், மில்க் பவுடர், சர்க்கரை,குங்குமப்பூ பால் சேர்த்து நன்றாக கெட்டியாகும் வரை மிக்ஸ் பண்ணவும்.நன்றாக ஆறவிடவும்.cham cham ஸ்டப்பிங் ரெடி.
- 9
சர்க்கரை சிறப்பில் உரிய சிலிண்டர் வடிவில் உள்ள ரசகுல்லாவை கைகளால் மெதுவாக பிழிந்து எடுக்கவும்
- 10
அதன் நடுவில் ஒரு கீறல் போடவும்
- 11
சிலிண்டர் சேப் ரசகுல்லாவின் நடுவில் ஸ்டப்பிங்கை சிறிது வைக்கவும்.அதன் மேல் ஒரு cherry ஐ பாதியாக கட் பண்ணி வைக்கவும்
- 12
பின் dedicated coconut இல் chum chum ஐ லேசாக பிரட்டி எடுக்கவும்
- 13
Cham cham sweet ரெடி.
- 14
மீதியுள்ள உருண்டையான ரசகுல்லாவை சர்க்கரைப் பாகுடன் பரிமாறவும்.ரசகுல்லா ரெடி
- 15
ஒரு கல்லுல ரெண்டு மாங்கா. ஒரே முறையில் இரண்டு இனிப்புகள்.
Similar Recipes
More Recipes
































கமெண்ட்