ஹம்முஸ் (Hummus recipe in tamil)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

ஹம்முஸ் என்பது வெள்ளை கொண்டைக்கடலையை வைத்து செய்யக்கூடிய ஒரு ஸ்பிரெட் அல்லது டிப். அரபு நாடுகளில் இந்த டிப் மிகவும் பிரபலியமானது. கபூஸ் என்னும் ஒரு ரொட்டிக்கு சேர்த்து சுவைப்பார்கள்.
#GA4 #Week8 #Dip

ஹம்முஸ் (Hummus recipe in tamil)

ஹம்முஸ் என்பது வெள்ளை கொண்டைக்கடலையை வைத்து செய்யக்கூடிய ஒரு ஸ்பிரெட் அல்லது டிப். அரபு நாடுகளில் இந்த டிப் மிகவும் பிரபலியமானது. கபூஸ் என்னும் ஒரு ரொட்டிக்கு சேர்த்து சுவைப்பார்கள்.
#GA4 #Week8 #Dip

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
  1. 1 கப் வெள்ளை கொண்டை கடலை
  2. 1 டீஸ்பூன் வெள்ளை எள்ளு
  3. 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு
  4. 2 பல் பூண்டு
  5. 1/2 டீஸ்பூன் சீரகம்
  6. 5 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில்
  7. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    கடலையை நன்கு கழுவி, தண்ணீரில் பத்து மணி நேரம் ஊறவைக்கவும்.பின்னரோ குக்கரில் சேர்த்து ஐந்து விசில் விட்டு எடுக்துக்கொள்ளவும். மற்ற பொருட்களை எடுத்து தயாராக வைக்கவும்.

  2. 2

    வெள்ளை எள்ளை வெறும் வாணலியில் போட்டு வறுத்து எடுத்து, மிக்ஸிஜாரில் uppu, ஆலிவ் ஆயில் சேர்த்து விழு தாக அரைக்கவும். இதைத்தான் தஹினி (tahini) என்று சொல்வார்கள்.

  3. 3

    பின்னர் மிஸ்ஜாரில் கடலை, தஹினி, சீரகம், பூண்டு, உப்பு, எலுமிச்சை சாறு, ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு விழுதாக அரைக்கவும். இப்போது ஹம்முஸ் டிப் தயார்.

  4. 4

    தயாரித்த விழுதை ஒரு சர்விங் பௌலுக்கு மாற்றி அதன் மேல் சில்லி பிளேக்ஸ், ஆலிவ் ஆயில் தூவினால் சுவையான ஹம்முஸ் சுவைக்கத்தயார்.

  5. 5

    இந்த டிப் சப்பாத்தி, சாலட் உடன் சேர்த்து சுவைக்க மிகவும் அருமையாக இருக்கும். சப்பாத்தியின் மேல் ஸ்பிரெட் செய்து ரோல் செய்தும் சுவைக்கலாம். அத்துடன் வெஜ்ஜீஸ் வைத்தும் சுவைக்கலாம்.

  6. 6

    இந்த ஹம்முஸ் மிடில் ஈஸ்ட் நாடுகளில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes