சமையல் குறிப்புகள்
- 1
இன்ஸ்டன்ட் கோதுமை அல்வா :
- 2
வாணலியில் நெய் சேர்த்து, துருவிய பாதாம் சேர்த்து வதக்கவும்.
- 3
அதனுடன் கோதுமை மாவு சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை நன்கு கிளறவும்.
- 4
தனியே சர்கரை, தண்ணீர், ஏலக்காய் தூள் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
- 5
கோதுமை மாவுடன், சர்க்கரை தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து, கட்டி இல்லாமல் கிளறி வேக வைக்கவும்.
- 6
நெய் சேர்த்து கிளறி, சுருண்டு, ஒட்டாமல் வரும் வரை கின்டவும்.
- 7
உடனடி கோதுமை அல்வா தயார்.
- 8
கோதுமை பாதுஷா செய்ய:
- 9
கோதுமை மாவு, உப்பு, சர்க்கரை, நெய், தயிர், பேக்கிங் பவுடர், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல பிசைந்து 10 நிமிடம் ஊற வைக்கவும்.
- 10
சர்க்கரை, தண்ணீர், ஏலக்காய் தூள் சேர்த்து, 1 கம்பி பதம் வரும் வரை, பாகு காய்ச்சவும். 1/2 எலுமிச்சை சாறு சேர்த்தால், பாகு இருகாமல் இருக்கும்.
- 11
பாதி மாவை எடுத்து, பெரிய சப்பாத்தி போல தேய்க்கவும்.
- 12
சிறிய மூடி அல்லது, டம்பளர் விளிம்பு மூலம், சிறு வட்டங்களாக வெட்டி கொள்ளவும்.
- 13
ஒரு வட்டத்தின் நடுவே, சிறு உருண்டை, கோதுமை அல்வா வைக்கவும். அதன் மேல், துருவிய, முந்திரி, பாதாம் சேர்த்து மேலே இன்னொரு சிறிய வட்டத்தை வைத்து, விளிம்புகள் அழகாக மடித்து கொள்ளவும்.
- 14
பொரிக்க தேவையான எண்ணெயை சூடாக்கி, பாதுஷக்களை, பொரித்து எடுக்கவும். மிதமான தீயில் வேக வைத்து எடுக்கவும்.
- 15
பொரித்த பாதுஷாகலை சர்க்கரை பாகில் 5 நிமிடம் ஊற வைக்கவும்.
- 16
துருவிய பாதாம் முந்தரி தூவி பரிமாறவும்.
Similar Recipes
More Recipes


















கமெண்ட் (5)