ரவை பணியாரம் (Ravai paniyaram recipe in tamil)

Meena Saravanan @cook_23486853
ரவை பணியாரம் (Ravai paniyaram recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ரவையை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு ரவை மூழகும் வரை தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அப்போதுதான் ரவை மிருதுவாக இருக்கும்.
- 2
பின் அதனுடன் மைதா, சர்க்கரை சேர்த்து ஒன்றாக கலக்க வேண்டும்.
- 3
பின் தேவையான அளவு தண்ணீர் சிறிது சிறிதாக ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- 4
ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் சுட வைத்து ஒரு குழி கரண்டியில் மாவை எடுத்து ஊற்றி பொறிக்க வேண்டும்.
- 5
அடிப்பாகம் நன்கு சிவந்து வெந்தவுடன் திருப்பி போட்டு மற்றொரு பக்கம் வேக வைத்தால் சுவையான குழி பணியாரம் ரெடி!
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14049999



கமெண்ட்