வாழை இலை கொழுக்கட்டை-பச்சரிசியில் இருந்து முழு செய்முறை விளக்கம்

பெரும்பாலும் கொழுக்கட்டையை நாம் கடையில் விற்கப்படும் ரெடிமேட் கொழுக்கட்டை மாவை வைத்து செய்வது வழக்கம். ஆனால் வீட்டிலேயே கொழுக்கட்டை மாவு செய்வது மிகவும் எளிய காரியம். பச்சரிசியை ஊறவைத்து அரைத்து அதில் இருந்து எப்படி கொழுக்கட்டை மாவைசெய்ய வேண்டும் என்பதைப் பற்றி இந்த ரெசிபியில் காணலாம். #ranjanishome
வாழை இலை கொழுக்கட்டை-பச்சரிசியில் இருந்து முழு செய்முறை விளக்கம்
பெரும்பாலும் கொழுக்கட்டையை நாம் கடையில் விற்கப்படும் ரெடிமேட் கொழுக்கட்டை மாவை வைத்து செய்வது வழக்கம். ஆனால் வீட்டிலேயே கொழுக்கட்டை மாவு செய்வது மிகவும் எளிய காரியம். பச்சரிசியை ஊறவைத்து அரைத்து அதில் இருந்து எப்படி கொழுக்கட்டை மாவைசெய்ய வேண்டும் என்பதைப் பற்றி இந்த ரெசிபியில் காணலாம். #ranjanishome
சமையல் குறிப்புகள்
- 1
பச்சரிசியை நன்றாக அலசி வெயிலில் 10 நிமிடம் உலர வைக்கவும்.
- 2
பின்னர் அதை ஒரு மிக்ஸியில் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும். மிக்ஸியில் சேர்க்கும்போது அரிசி சிறிய அளவு ஈரப்பதத்தோடு இருக்கவேண்டும்.
- 3
அரைத்த மாவை சல்லடையில் கொட்டி நன்றாக சலித்துக் கொள்ளவும். கட்டிகள் ஏதேனும் இருந்தால் அதை தனியாக எடுத்து விடவும்.
- 4
பின்னர் கட்டிகள் எதுவும் இல்லாமல் இருக்கும் சலித்த அரிசி மாவை ஒரு துணியில் பரப்பி விடவும்.
- 5
அந்தத் துணியின் எல்லா பக்கங்களையும் சேர்த்து ஒரு மூடி போட்டு கொள்ளவும். பின்னர் அதை ஒரு இட்லி தட்டில் வைத்து 15 நிமிடம் ஆவி கட்டிக் கொள்ளவும்.
- 6
வேகவைத்து எடுத்த அரிசி மாவை தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும்.
- 7
அதில் தேவையான அளவு உப்பு, சுடு தண்ணீர் கலந்து மாவை சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும். கொழுக்கட்டை செய்வதற்கு மாவு தயார்.
- 8
இப்பொழுது கொழுக்கட்டையில் பூரணம் எப்படி செய்வது என்று பார்ப்போம். உள்ளே வைக்கும் இனிப்பு பூரணத்திற்கு முதலில் 1 கப் மல்லாட்டை வறுத்து தோலை உரித்துக் கொள்ளவும்.
- 9
பின்னர் 3/4 கப் அளவிற்கு வெல்லம் எடுத்துக் கொள்ளவும். மல்லாட்டையையும் வெல்லத்தையும் மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும். இப்பொழுது உள்ளே வைக்கும் கொழுக்கட்டை பூரணம் தயார்.
- 10
ஒரு வாழை இலையில் எண்ணெய் தடவிக் கொள்ளவும்.
- 11
கொழுக்கட்டை மாவில் இருந்து ஒரு சிறு உருண்டையை எடுத்துக் கொள்ளவும். அதை வாழை இலையில் நன்றாகத் தட்டிக்கொள்ளவும்.
- 12
அதனுள்ளே தேவையான அளவுக்கு பூரணம் வைத்துக் கொள்ளவும்.
- 13
அதை நன்றாக மூடி தேவையான வடிவத்தை செய்து கொள்ளவும்.
- 14
பின்னர் கொழுக்கட்டை வைத்திருக்கும் வாழையிலையில் நன்றாக மடித்துக் கொள்ளவும். இதன்படி மீதம் இருக்கும் அனைத்து கொழுக்கட்டையும் வாழையிலையில் தட்டி கொள்ளலாம்.
- 15
பின்னர் அதை ஒரு இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடம் வேக வைத்து எடுக்க வேண்டும்.
- 16
அரிசி மாவில் இருந்து செய்த வாழை இலை கொழுக்கட்டை தயார்.
Keywords
Similar Recipes
More Recipes




















கமெண்ட் (2)