வெஜிடபிள் பனியாரம்

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

#kids3
குழந்தைகளுக்கு பனியாரம் என்றால் மிகவும் பிடிக்கும்.அதுவும் காய்கறிகள் சேர்த்து செய்து கொடுத்தால் குழந்தைகள் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.இதில் குழந்தைகளுக்கு என்பதால் மிளகாய் சேர்க்காமல் செய்துள்ளேன்.அதற்கு பதிலாக கண் பார்வைக்கு நல்லதாக குடமிளகாய், கேரட் போன்றவை சேர்த்து செய்துள்ளேன்.

வெஜிடபிள் பனியாரம்

#kids3
குழந்தைகளுக்கு பனியாரம் என்றால் மிகவும் பிடிக்கும்.அதுவும் காய்கறிகள் சேர்த்து செய்து கொடுத்தால் குழந்தைகள் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.இதில் குழந்தைகளுக்கு என்பதால் மிளகாய் சேர்க்காமல் செய்துள்ளேன்.அதற்கு பதிலாக கண் பார்வைக்கு நல்லதாக குடமிளகாய், கேரட் போன்றவை சேர்த்து செய்துள்ளேன்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 பேர்
  1. 3 கப் இட்லி மாவு
  2. 1/2 பெரிய வெங்காயம்
  3. 1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய கேரட்
  4. 1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய பீன்ஸ்
  5. 1டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய குடமிளகாய்
  6. 1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய வெங்காய தாள்
  7. 1 ஸ்பூன் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை
  8. ஒரு டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை
  9. 1/2 ஸ்பூன் தூள் உப்பு
  10. பனியாரம் சுட தேவையான எண்ணெய்
  11. 1 டேபிள் ஸ்பூன் கடுகு
  12. 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  13. 1 ஸ்பூன் கடலை பருப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    கேரட், பீன்ஸ்,பெரிய வெங்காயம், குடை மிளகாய், வெங்காயத்தாள், கருவேப்பிலை, கொத்தமல்லி எல்லாவற்றையும் பொடியாக அரிந்து கொள்ளவும்.ஒரு வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து ஒரு ஸ்பூன் கடுகு,உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து சிவந்தவுடன் அதில் எல்லா காய்கறிகளையும், கருவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். கொத்தமல்லித் தழையை இட்லி மாவில் தனியாக சேர்த்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு ஐந்து நிமிடம் வதங்கியவுடன் எல்லாவற்றையும் மாவில் சேர்த்து கொள்ளவும். அரை ஸ்பூன் வரை தூள் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.. பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து நன்கு சூடு ஆனவுடன் எண்ணெய் அதில் ஊற்றவும். எண்ணெய் காய்ந்தவுடன் சிறிய கரண்டி கொண்டு ஒவ்வொரு குழியிலும் பணியார மாவு ஊற்றவும். மிதமான தீயில் அடுப்பை வைத்து மூடி வைத்து விடவும்.ஒரு புறம் சிவந்தவுடன் பணியார கம்பி கொண்டு திருப்பிவிட்டு மறுபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

  3. 3

    ஸ்கூலுக்கு கொடுப்பதால் இதற்கு புளி சட்னி ஏதாவது ஒன்று செய்து தொட்டுக்கொள்ள கொடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes