பீன்ஸ் பருப்பு உசிலி (Beans Parupu Usili recipe in tamil)

Gayathri Vijay Anand @cook_24996303
பீன்ஸ் பருப்பு உசிலி (Beans Parupu Usili recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப்பில் சிறிதளவு அரிசி, துவரம்பருப்பை தண்ணீரில் 10நிமிடம் நன்கு ஊற வைத்து கொள்ளவும்
- 2
கூக்கரில் பொடியாக நறுக்கி பீன்சஸ போட்டு 2 விசில் விட்டு வேகவைத்து கொள்ளவும்.
- 3
ஊறிய அரிசி பருப்பை மிக்சியில் போட்டு வரமிளகாய், சீரகம்,மிளகு, மஞ்சள் தூள், உப்பு, வெங்காயம், பூண்டு தண்ணீர் தெளித்து கொரகொரபாக அரைத்து கொள்ளவும்.
- 4
ஒரு வானலியில் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் கடலைப்பருப்பு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும்.இ
- 5
தாளித்த பிறகு அதில் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கிளறி விட்டு அதில் வேகவைத்த பீன்ஸை போட்டு நன்கு கிளறி விட்டு மூடி வேக வைத்து கொள்ளவும்.
- 6
கடைசியில் தேங்காய் துருவல் சேர்த்து கலந்து விடவும்.
- 7
சுவையான பீன்ஸ் பருப்பு உசிலி ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14219976




















கமெண்ட்