பாரம்பரிய முறையில் வெந்தயக்கீரை சூப் (Venthaya keerai soup recipe in tamil)

உடலுக்கு நன்மை தரக்கூடிய வெந்தயக்கீரை சூப் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம்.
பாரம்பரிய முறையில் வெந்தயக்கீரை சூப் (Venthaya keerai soup recipe in tamil)
உடலுக்கு நன்மை தரக்கூடிய வெந்தயக்கீரை சூப் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம்.
சமையல் குறிப்புகள்
- 1
எளிதில் வளரும் வெந்தயக்கீரையை இளம் தளிர் நிலையில் மேல் கீரையை மட்டும் அதாவது வேரில்லாமல் தண்டு பகுதிவரை மட்டும் கிள்ளி அதை சுத்தம் செய்து வெறும் இலைகளை மட்டும் ஆய்ந்து கொள்ளவும்.
- 2
அடுப்பில் ஒரு பாத்திரத்தில் அரிசி களைந்த நீரில் அதாவது களனியில் இந்த கீரைகளை பசுமை மாறாமல் வேக வைத்து அதில் தேவைக்கேற்ப உப்பு மிளகு சீரகத்தூள் சேர்த்து நன்கு வேக வைக்கவும். தடிமன் மேலும் வேண்டுமென்றால் சோயாபீன்ஸ் மாவு 1 ஸ்பூன் எடுத்து கரைத்து சேர்த்து கொள்ளலாம்.
- 3
பின் தேவைக்கேற்ப கார்ன் சிப்ஸ்களை வறுத்து கொள்ளவும்.
- 4
கீரை நன்றாக வெந்ததும் அதை தேவைக்கேற்ப சிறு சிறு கப்களில் ஊற்றி அதன் மேல் கார்ன் சிப்ஸ்களை போட்டு காரம் தேவைப்பட்டால் மேலும் 1 ஸ்பூன் அளவு மழைச்சாரல் போல தூவி அருந்த சுவையாக இருக்கும்.
- 5
- 6
குறிப்பு : இலை வேகவைக்கும் போது கன்னிபோகாமல் அதாவது அயண்டு போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
- 7
பாரம்பரிய முறையில் அரிசி களைந்த நீரை பயன்படுத்த மேலும் இதன் பலன் அதிகரிக்கும்.
Keywords
Similar Recipes
More Recipes















கமெண்ட்