புடலங்காய் பொரியல்
#Ga4 week24
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் புடலங்காயை உப்பு வைத்து நன்கு தேய்த்துக் கொள்ளவும்.பின் இரண்டாக அறுத்து அதில் இருக்கும் விதைகளை அகற்றி கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு உளுத்தம் பருப்பு,கடலைப் பருப்பு, பச்சை மிளகாய், கருவேப்பிலை,பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
- 2
வெங்காயம் நன்கு வதங்கிய பிறகு பொடியாக நறுக்கி வைத்துள்ள புடலங்காயை சேர்த்து வேகவிடவும்.பின் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து வேக வைக்கவும்.
- 3
காய் நன்றாக வெந்ததும் அதில் துருவிய தேங்காய் துருவலை சேர்த்து இறக்கினால் சுவையான புடலங்காய் பொரியல் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14643655










கமெண்ட்