மேகி சீஸ் நக்கட்ஸ்
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை இரண்டாக வெட்டி குக்கரில் போட்டு வேக வைக்க வேண்டும். வேக வைத்த உருளைக்கிழங்கை தோல் உரித்து மசித்து வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு, சிறிதளவு வெட்டிய வெங்காயம், சாட் மசாலா உப்பு, மிளகுதூள்,அரிசிமாவு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
- 3
பின்னர் ஒரு தட்டில் மேகி ஒரு பாக்கெட்டை நொறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் மேகி மசாலாவுடன் மைதா சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- 4
பிசைந்து வைத்த மாவை உருட்டி தட்டி அதன் நடுவில் சீஸ் வைத்து முதலில் மைதா கலவையில் முக்கி பின்னர் மேகியில் உருட்டி பொரித்தெடுக்க வேண்டும்.
- 5
அவ்வளவுதான் நம்மளுடைய சுவையான மேகி சீஸ் நக்கட்ஸ் தயார். மிகவும் சுவையாக இருக்கும் நீங்களும் செய்து பாருங்கள்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14672479



















கமெண்ட்