Jowar roti/ஜோவர் ரொட்டி

Gayathri Vijay Anand @cook_24996303
Jowar roti/ஜோவர் ரொட்டி
சமையல் குறிப்புகள்
- 1
பெரிய வெங்காயம், பச்சை மிளகாயை, காய்ந்த மிளகாயை அனைத்தையும் பொடியாக நறுக்கிய கொள்ளவும்.
- 2
ஒரு வானலியில் எண்ணெய் கடுகு கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு சீரகம் வெங்காயம் மிளகாயை சேர்த்து கருவேப்பிலை பெருங்காயம் தூள் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்
- 3
ஒரு பெரிய பாத்திரத்தில் ஜோவர் மாவு 500கி எடுத்து தேவையான அளவு உப்பு, வதக்கி வெங்காயம் மிளகாயை சேர்த்து நன்றாக தண்ணீர் விட்டு ரொட்டி மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.
- 4
பிறகு தோசை கல்லை நன்கு காய்ந்த பிறகு மாவை தோசைக்கல்லில் வைத்து தண்ணீர் தொட்டு நன்கு தட்டி கொள்ளவும்.1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு மூடி வைத்து மிதமான தீயில் 7 நிமிடம் வேகவிடவும் பிறகு திருப்பி போட்டு அதே போல் வேக வைத்தால் ரொட்டி ரெடி.
- 5
அசத்தலான ஜோவர் ரொட்டி ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14676228
















கமெண்ட் (2)