ராஜஸ்தான் ஃபேமஸ் மால்புவா
#GA4 Week25
சமையல் குறிப்புகள்
- 1
வாழைப்பழத்தை நன்கு மசித்து கொள்ளவும்.
- 2
இத்துடன் கோதுமைமாவு, உப்பு, பெருஞ்சீரகம், ஏலக்காய்பொடி மற்றும் பால் சேர்த்து மாவு பதம் வரும் வரை நன்றாக கலக்கவும்.
- 3
ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து 6-7 நிமிடங்கள் சமைக்கவும். இந்த சர்க்கரை தண்ணீர் கொதிக்கும் போது அதில் ஒரு சிட்டிகை ஏலக்காய் சேர்க்கவும். சர்க்கரை பாகு நன்றாக கொதித்து பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
- 4
ஒரு தனி வாணலியில் நெய் மற்றும் எண்ணெய் சூடானதும், கலந்து வைத்துள்ள மாவு கலவையை எடுத்து கொஞ்சமாக அந்த ஊற்றவும்.
- 5
இது தீயாமல் இருக்க நடுத்தர தீயிலோ அல்லது குறைந்த தீயிலோ இதை சமைக்கவும். இரண்டு பக்கமும் பொன்னிறமாக வரும் வரை இதை சமைக்கவும்.
- 6
சமைத்த மல்புவாவை சர்க்கரை பாகில் நனைத்து எடுக்கவும். நீங்கள் அதிக இனிப்பை விரும்பினால், மல்புவாவை சர்க்கரை பாகில் 30 நிமிடங்கள் ஊறவைக்கவும். சுவையான மால்புவா ரெசிபி ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes

















கமெண்ட்