சோயா வெஜ் பிரியாணி
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கைப்பிடி சின்ன வெங்காயம் பெரிய வெங்காயம் கேரட் பீன்ஸ் உருளைக்கிழங்கு தக்காளி கைப்பிடி கொத்தமல்லி புதினா இலைகளை சுத்தம் செய்து அறிந்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
பாஸ்மதி அரிசியை கழுவி ஒரு ஸ்பூன் நெய் விட்டு வறுத்து சமைக்க அரைமணி நேரம் முன்னர் தண்ணீர் ஊற்றி வைக்கவும்.
- 3
குக்கரில் நெய் விட்டு பட்டை கிராம்பு சோம்பு ஸ்டார் அனீஸ் பிரிஞ்சி இலை கடல்பாசி ஏலக்காய் வறுத்து பின் சின்ன வெங்காயம் பெரிய வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்.சற்று வதங்கியதும் இஞ்சி பூண்டு நான்கைந்து சின்ன வெங்காயம் ஒரு பச்சை மிளகாய் சேர்த்து கரகரப்பாக அரைத்து அதனை இதில் சேர்க்கவும்.இவை நன்றாக சிவந்து வர சோயாவை தனியாக வேக வைத்து எடுத்து பிழிந்து பின்னர் அதை இதில் சேர்க்கவும்.
- 4
நன்றாக கலந்த பின் அறிந்து வைத்திருக்கும் கேரட் பீன்ஸ் உருளைக்கிழங்கு ஆகியவற்றை சேர்க்கவும் காய்கறி வதங்கியபின் உப்பு தேவையான மசாலா சாமான்களை சேர்த்து வதக்கவும்.
- 5
மசாலா சற்று நன்றாக வாசம் வந்ததும் ஊற வைத்திருக்கும் அரிசியை காய்கறி கலவையில் சேர்த்து நன்றாக கலந்து விட்டு கொத்தமல்லி புதினா இலைகள் தூவி சிறிது நெய் மேலும் சேர்த்து குக்கரில் 2 விசில் வைத்து என்ன சிம்மில் வைத்து 5 நிமிடம் இரக்க சுவையான வெஜ் சோயா பிரியாணி தயார் இதற்கு தயிர் பச்சடி மிகவும் நன்றாக இருக்கும்.
Keywords
Similar Recipes
More Recipes













கமெண்ட்