கருப்பு உளுந்து சாதம் மட்டன் கிரேவி
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கப் அரிசியோட அரை கப் கருப்பு உளுந்து மற்றும் அரை ஸ்பூன் வெந்தயம் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். இப்பொழுது ஒரு பாத்திரத்தில் சாதத்திற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும் தண்ணீர் கொதித்தவுடன் அதில் ஊற வைத்து வைத்திருக்கும் அரிசி உளுந்தை சேர்த்து மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
- 2
பாதி வெந்தவுடன் அதில் 20 பல் பூண்டு சேர்க்க வேண்டும். நன்றாக வெந்தவுடன் சாதத்தை வடித்து எடுக்க வேண்டும்.
- 3
அரைக்கிலோ மட்டனை அளவு உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் பின்பு கிரேவி செய்ய தேவையான சின்ன வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது வந்து கீரை புதினா ஆகியவற்றை சிறிது சிறிதாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
- 4
ஒரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து எண்ணை காய்ந்ததும் அதில் பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை நட்சத்திர சோம்பு ஆகியவற்றை சேர்க்க வேண்டும் பின்பு நறுக்கி வைத்திருக்கும் சின்ன வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து தேவையான உப்பும் சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் வதங்கிய பின்பு அதில் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
- 5
இது வெங்காயம் வதங்கிய பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் அரைமூடி தேங்காய் சேர்த்து அதோடு நல்லமிளகு சின்ன வெங்காயம் நல்ல மிளகு ஒரு ஸ்பூன் சோம்பு வத்தல் தூள் மல்லித்தூள் மஞ்சள்தூள் பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்றாக சேர்த்து நன்றாக அரைத்தெடுக்கவும் பின்பு அதை மட்டன் ஓடு சேர்த்து நன்றாக கலந்து விடவும் பின்பு சிறிதளவு தண்ணீர் மற்றும் நறுக்கி வைத்திருக்கும் மல்லிக்கீரையை அதோடு சேர்த்து நன்றாக கிளறி விடவும் தேவையான உப்பு சேர்த்து 15 நிமிடம் மிதமான தீயில் மூடி வைத்து வேக விடவும்
- 6
சுவையான மற்றும் மிகவும் சத்தான கருப்பு உளுந்து அரிசி சாதம் மற்றும் மட்டன் கிரேவி ரெடி. நன்றி
Keywords
Similar Recipes
More Recipes


















கமெண்ட்