பீச் பட்டாணி சுண்டல்
சமையல் குறிப்புகள்
- 1
பட்டாணியை 8 மணி நேரம் ஊறவைத்து பின் மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து குக்கரில் வேகவிடவும்.
- 2
ஒரு மிக்ஸி ஜாரில் பெரிய வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.
- 3
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போட்டு அரைத்த கலவையை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின் மிளகாய் தூள், கரம் மசாலா,மல்லித் தூள், மஞ்சள் தூள்,தேவையான அளவு உப்பு,தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொதிக்கவிடவும்.
- 4
நன்றாக கொதித்த பின் வேக வைத்துள்ள பச்சை பட்டாணியை சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும்.
- 5
இறுதியாக பரிமாறும் போது பொடியாக நறுக்கிய வெங்காயத்தை தூவி பரிமாறவும். சுவையான பீச் பட்டாணி சுண்டல் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14891765















கமெண்ட் (2)