இட்லி, சின்ன வெங்காயம் சாம்பார்

#Combo special 1
இட்லிக்கு சாம்பார் தான் சரியான மேட்ச். இந்த சின்ன வெங்காயம் சாம்பார் இன்னும் சூப்பராக இருக்கும்.
இட்லி, சின்ன வெங்காயம் சாம்பார்
#Combo special 1
இட்லிக்கு சாம்பார் தான் சரியான மேட்ச். இந்த சின்ன வெங்காயம் சாம்பார் இன்னும் சூப்பராக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் துவரம் பருப்பை நன்றாக கழுவி குக்கரில் மஞ்சள் தூள் சேர்த்து வேகவிடவும். 3.விசில் வரும் வரை வேக வைக்கவும். புளி ஊற வைக்கவும்.
- 2
ஒரு அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெந்தயம் போட்டு, பிறகு கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும், பச்சை மிளகாயை சிறிதாக நறுக்கி போடவும், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், அரிந்த தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். 2 வரமிளகாய் போடவும். நன்றாக வதக்கவும். பிறகு புளி தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். 1ஸ்புன் மிளகாய் தூள், குழம்பு பொடி, உப்பு போடவும். நன்றாக வெந்ததும் வெந்த பருப்பை நன்றாக கடைந்து ஊற்றி கொதிக்கவிடவும்.
- 3
பின்னர் கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும். இட்லிக்கு சூப்பரான சைடீஸ். நெய் ஊற்றி சாப்பிட சுவையாக இருக்கும்.
Similar Recipes
More Recipes











கமெண்ட்