திண்டுக்கல் மட்டன் பிரியாணி
சமையல் குறிப்புகள்
- 1
சின்ன வெங்காயம், இஞ்சி பூண்டு, மிளகாய், கொத்தமல்லி, புதினா சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
- 2
அரிசியை அரைமணி நேரம் ஊற போடவும்
- 3
ஒரு குக்கர் வைத்து அதில் நெய், எண்ணெய் சேர்த்து சூடானதும் முழு கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.
- 4
அதனுடன் வெங்காயம் உப்பு சேர்த்து வதக்கவும், நிறம் மாற தொடங்கியதும் அரைத்த விழுது சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.
- 5
மசாலா பொடிகள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- 6
தயிர் சேர்த்து கலந்து கொள்ளவும்
- 7
மட்டன் சேர்த்து கலந்து 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- 8
கொதி வந்ததும் குக்கர் மூடி 2 சத்தம் வரும் வரை வைக்கவும். 75 % மட்டன் வெந்துருக்கும்.
- 9
அடுப்பில் குக்கர் வைத்து பிரியாணி க்கு தேவையான தண்ணீர் சேர்க்கவும் 1 கப் அரிசி க்கு 1.5 கப் தண்ணீர் விதம் சேர்க்கவும்.
- 10
மீதம் இருந்தா கொத்தமல்லி, புதினா, எலுமிச்சை பழம் பிழிந்து விட்டு கொதிக்க விடவும்.
- 11
நன்கு கொதித்ததும் அரிசி சேர்த்து வேக வைக்கவும்
- 12
அரிசி கொதித்து தண்ணீர் வந்த தொடங்கியதும் ஒரு பாத்திரம் போட்டு மூடி தம் வைக்கவும்.
- 13
மிதமான சூட்டில் 15 நிமிடம் கழித்து இறக்கவும். சுவையான பிரியாணி தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
































கமெண்ட் (2)