சுவையான மீன் குழம்பு மற்றும் மீன் வறுவல் செய்வது எப்படி?

மிக எளிமையான முறையில் மீன் குழம்பு மற்றும் மீன் வருவல் செய்முறை.
சுவையான மீன் குழம்பு மற்றும் மீன் வறுவல் செய்வது எப்படி?
மிக எளிமையான முறையில் மீன் குழம்பு மற்றும் மீன் வருவல் செய்முறை.
சமையல் குறிப்புகள்
- 1
3/4 கிலோ மீனை சுத்தமாக கழுவி எடுத்து வைத்து கொள்ளவும். மசாலா அரைக்க தேவையான பொருட்களை எல்லாம் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வைத்து கொள்ளவும்.
- 2
இப்பொழுது ஒரு கடாயில் மீனை போட்டு, அரைத்து வைத்த மசாலாவை ஊற்றி 1 ஸ்பூன் உப்பு சேர்த்து 1 கிளாஸ் தண்ணீர் சேர்த்து நன்றாக ஸ்பூனில் கலந்து விடவும்.
- 3
எல்லாம் நல்லா கலந்த பிறகு அடுப்பு பற்ற வைக்கவும். பிறகு, 5 நிமிடம் மூடி போட்டு வேக விடவும். மீன் நன்றாக வெந்ததும், இறக்கி விடவும்.
- 4
தாளிக்க கடாயை அடுப்பில் வைத்து, 3 ஸ்பூன் சமையல் என்னை ஊற்றி வெந்தயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 5
வெங்காயம் நன்றாக பொன்நிறமாக வதங்கியதும் குழம்பில் சேர்த்து நன்றாக கலந்து விடவும். அவ்வளவு தான், சுவையான மீன் குழம்பு ரெடி.
- 6
அடுத்து மீன் வறுவல் செய்முறை பார்ப்போம். வருவலுக்கு மீனை சுத்தமாக கழுவி வைக்கவும். பிறகு மாறினேஷனுக்கு ஒரு தட்டில், 2 ஸ்பூன் மிளகாய் போடி, 1 ஸ்பூன் மஞ்சள் போடி, ஒரு ஸ்பூன் அரிசி போடி, இடித்து வைத்த பூண்டு, தேவையான அளவுக்கு உப்பை சேர்த்து விடவும்.
- 7
லேசாக தண்ணீர் சேர்த்து கெட்டியாக கலந்து விடவும். பிறகு மீனை சேர்த்து நன்றாக மசாலா தடவி விடவும். 10 நிமிடம் நன்றாக ஊற விடவும்.
- 8
பிறகு சிம்மில் அடுப்பு பற்ற வைத்து, தவாவில் 2 ஸ்பூன் சமையல் எண்ணெய் ஊற்றி, மசாலா சேர்த்த மீனை பொரித்து எடுக்கவும்.
- 9
மீனை மறுபக்கம் திருப்பி நன்றாக பொரித்து எடுக்கவும். அவ்வளவு தான் மீன் வறுவல் ரெடி. இந்த மீன் குழம்பும் வறுவலும் சாதத்துடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
- 10
மீன் குழம்பு ஒரு நாள் எடுத்து வைத்தும் சாப்பிடலாம், மிகவும் சுவை கூடும். இந்த ரெசிப்பி செய்து பார்த்து கமெண்ட் செய்யுங்கள்.
Keywords
Similar Recipes
More Recipes
- சூப்பரான முருங்கைக்கீரை காம்பு சூப் 👌👌👌 (murungai Keerai Kambu Soup Recipe inTamil)
- இனிப்பு சோளம் காய்கறிகள் சூப் (Sweet Corn Vegetables Soup)
- பீர்க்கங்காய் தோல் துவையல் (PEERKANGAI THOGAYAL) #chefdeena
- மட்டன் ப்ரோக்கோலி (Mutton brocoli Fry Recipe in Tamil)
- மீல் மேக்கர் மிளகு வறுவல்/ Meal Maker Pepper fry






























கமெண்ட்