இனிப்பு சோளம் காய்கறிகள் சூப் (Sweet Corn Vegetables Soup)

Kanaga Hema😊
Kanaga Hema😊 @cook_kanagahema

#Immunity
இனிப்பு சோளம் மற்றும் சத்தான காய்கறிகள் சேர்த்து செய்த சூப்..
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்..

இனிப்பு சோளம் காய்கறிகள் சூப் (Sweet Corn Vegetables Soup)

#Immunity
இனிப்பு சோளம் மற்றும் சத்தான காய்கறிகள் சேர்த்து செய்த சூப்..
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 பேர்
  1. 150 கிராம் இனிப்பு சோளம்
  2. 1கேரட் பொடியாக நறுக்கியது
  3. 150g பொடியாக நறுக்கிய பீன்ஸ்
  4. 2 டேபிள்ஸ்பூன் கான்பிளவர் மாவு
  5. 1 டேபிள் ஸ்பூன் மிளகுத்தூள்
  6. தேவையானஅளவு உப்பு
  7. தேவையானஅளவு தண்ணீர்
  8. அரைக்க:
  9. 50 கிராம் இனிப்பு சோளம்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் இனிப்பு சோளத்தை கருதிலிருந்து தனியாக உதிர்த்து எடுத்து, அரைப்பதற்கு 3 ஸ்பூன் வேக வைக்காத, இனிப்பு சோளம் தனியாக எடுத்து வைத்து விட்டு, மற்றவை இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

  2. 2

    கேரட் மற்றும் பீன்ஸை பொடியாக நறுக்கி வைக்கவும்.

  3. 3

    பிறகு ஒரு பாத்திரத்தில் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் நன்றாக கொதித்தவுடன் பொடியாக நறுக்கிய கேரட்டை சேர்த்து வேகவிடவும். இந்த நிமிடம் கழித்து பீன்ஸ் சேர்த்து வேகவிடவும், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

  4. 4

    முதலில் எடுத்து வைத்த வேக வைக்காத இனிப்பு சோளத்தை மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.

  5. 5

    காய்கறி வெந்தவுடன் அரைத்த சோளம் விழுதை அதனுடன் சேர்த்து நன்றாக வேகவிடவும். மிளகுத்தூள் சேர்க்கவும்.

  6. 6

    பிறகு முதலில் வேக வைத்த இனிப்பு சோளத்தை சூப்பில் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.

  7. 7

    பிறகு ஒரு கப்பில் 2 ஸ்பூன் கார்ன் பிலர் மாவு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து அதையும் சூப்பில் சேர்த்து வேகவிடவும். சூப் திக்காக வருவதற்காக.

  8. 8

    5 நிமிடம் கரண்டி வைத்து நன்றாக கலந்து விட்டு இறக்கவும்.. சுவையான மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இனிப்பு சோளம் காய்கறி சூப் தயார்.. உடலுக்கு நல்ல தெம்பு அளிக்கும் சத்தான சூப் 💪💪😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kanaga Hema😊
Kanaga Hema😊 @cook_kanagahema
அன்று

Similar Recipes