1.Wheat pinwheel 2.wheat momos 3.wheat pocket 4.wheat paratha

#cookwithsugu
#mycookingzeal
ஒரே மாவு ஒரே மசாலா நான்கு விதமான செய்முறைகள் . கோதுமை மாவில் நான்கு விதமான மாலைச் சிற்றுண்டி மற்றும் காலை உணவு
1.Wheat pinwheel 2.wheat momos 3.wheat pocket 4.wheat paratha
#cookwithsugu
#mycookingzeal
ஒரே மாவு ஒரே மசாலா நான்கு விதமான செய்முறைகள் . கோதுமை மாவில் நான்கு விதமான மாலைச் சிற்றுண்டி மற்றும் காலை உணவு
சமையல் குறிப்புகள்
- 1
மாவு செய்முறை :கோதுமை மாவில் சமையல் எண்ணெய் ஒரு ஸ்பூன் தேவையான உப்பு சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் கலந்து பிசையவும் சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து ஐந்து நிமிடம் ஊற வைக்கவும்
- 2
மசாலா செய்முறை : அடுப்பில் கடாயை வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி ஒரு ஸ்பூன் சீரகம் கருவேப்பிலை தாளித்து பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்
- 3
பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும் இஞ்சி பூண்டு விழுது மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா தூள் மல்லித் தூள் சேர்த்து வதக்கவும்
- 4
வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து அதனுடன் சேர்த்து தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும் ஒரு நிமிடம் வதக்கிய பின் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும் ஸ்டஃப்பிங் மசாலா ரெடி
- 5
1.wheat pinwheel: பிசைந்து வைத்த கோதுமை மாவில் பெரிய அளவு உருண்டையாக எடுத்து சப்பாத்தி கட்டையில் வைத்து மெல்லியதாக சப்பாத்தியாக தேய்க்கவும் சப்பாத்தியில் உருளைக்கிழங்கு மசாலாவை எல்லா இடங்களிலும் தடவி விடவும்
- 6
சப்பாத்தி படத்தில் காட்டியுள்ளவாறு சுற்றவேண்டும் இரண்டு பக்கங்களையும் நன்றாக ஒட்டிக் கொண்டு கத்தியால் சிறுசிறு பாகங்களாக வெட்டவும்
- 7
அடுப்பில் கடாய் வைத்து வெட்டிய பின்வீல் துண்டுகளை வைத்து சுற்றிலும் எண்ணெயை ஊற்றி திருப்பி திருப்பி போட்டு வேகவைத்து இறக்கவும் wheat pinwheel ரெடி
- 8
2. Wheat pocket:
கோதுமை மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சின்ன வட்டமாக தேய்த்து கத்தியால் சதுர வடிவில் வெட்டிக் கொள்ளவும் நடுவில் உருளைக்கிழங்கு மசால் வைத்து மடித்து விடவும் மூன்று பக்கங்களையும் ஒட்டி ஃபோக் கரண்டியால் லேசாக அழுத்திவிடவும் - 9
அடுப்பில் எண்ணெய் காய வைத்து நன்கு காய்ந்ததும் செய்து வைத்துள்ள கோதுமை பாக்கெட்டுகளை போட்டு வறுத்து எடுக்கவும் wheat pocket ரெடி
- 10
3. Wheat momos:
கோதுமை மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சிறு வட்டமாக சப்பாத்தி போன்று தேய்த்து நடுவில் மசாலாவை வைத்து சேலையை மடிப்பது போல் இரு ஓரங்களையும் மடித்து நன்றாக ஒட்டி வைக்கவும் - 11
இட்லி சட்டியில் தண்ணீர் ஊற்றி தட்டு வைத்து செய்து வைத்துள்ள மோமோஸை வைத்து மூடிவைத்து ஆவியில் 5 நிமிடம் வேக வைத்து இறக்கவும் wheat veg momos ரெடி
- 12
4. Wheat paratha:
கோதுமை மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி விரல்களால் கிண்ணம் போல் செய்து மசாலாவை உள்ளே வைத்து உருண்டையாக உருட்டி உள்ளங்கையில் வைத்து சிறு அழுத்தம் கொடுக்கவும் - 13
அடுப்பில் கடாயை வைத்து செய்து வைத்துள்ள பராத்தாக்களை வைத்து சுற்றிலும் எண்ணெயை ஊற்றி இரண்டு புறமும் திருப்பி திருப்பி விட்டு நன்கு வேக வைத்து எடுக்கவும் wheat paratha ரெடி
- 14
இது மாதிரி நான்கு விதமான ஈவினிங் ஸ்நாக்ஸ் மற்றும் காலை உணவு செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கும் பிடிக்கும் விரும்பி உண்பர்
Keywords
Similar Recipes
More Recipes











































கமெண்ட் (4)