சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மல்லி சீரகம் மிளகு பட்டை மிளகாய் பட்டை சேர்த்து வருத்து எடுத்துக்கனும்
- 2
பிறகு கொஞ்சம் நல்லெண்ணெய் சேர்த்து ஒரு பாதி வெங்காயம் இஞ்சி பூண்டு தேங்காய் சேர்த்து 2 நிமிடம் வதக்கிய பிறகு ஏற்கனவே வருத்து வைத்த சீரகம் மிளகு சோம்பு இதை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்
- 3
ஒரு கடாயில் காய்ந்ததும் அதில் நல்லெண்ணெய் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் பட்டை கிராம்பு ஏலக்காய் போடவும் பிறகு வெங்காயம் சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்
- 4
பிறகு பச்சை மிளகாய் புதினா கொத்தமல்லி கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்
- 5
தக்காளி சேர்த்து அதில் கொஞ்சம் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். வதக்கிய பிறகு அதில் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்
- 6
பிறகு அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்
- 7
ஒரு 3 நிமிடம் நன்கு வதக்கிய பிறகு அதில் அரைத்த விழுது போட்ட மிக்சி ஜாரில் தண்ணீர் அலசி ஊற்றிய பிறகு நன்கு கொதிக்க விடனும்
- 8
ஒரு மூடி போட்டு மூடி 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து விடனும்
- 9
தேவைக்கு ஏற்ப தண்ணீர் சேர்த்து கொள்ளவும். சிலருக்கு தண்ணீயாக பிடிக்கும் சிலருக்கு கெட்டியாக பிடிக்கும்.
- 10
சுவையான சால்னா ரெடி
Keywords
Similar Recipes
More Recipes


























கமெண்ட்