மீதா பாண்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பூசணிக்காயை முக்கோண வடிவத்தில் வெட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் அதை நன்கு கழுவி, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி எலுமிச்சை சாறு சேர்த்து, அதில் 2 மணி ஊற வைக்க வேண்டும்.
- 2
அது ஊறிய பின்னர் நன்கு கழுவி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
- 3
ஒரு மிக்ஸி ஜாரில் கறிவேப்பிலை 2 ஸ்பூன் சீனி மற்றும் எலுமிச்சை சாறு சிறிதளவு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். பின்னர் அதை நன்கு வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
- 4
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சர்க்கரை மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அதில் வெட்டிய பூசணிக்காயும் சேர்த்து எடுத்து வைத்துள்ள கறிவேப்பிலை சாறையும் நிறத்திற்காக சேர்க்க வேண்டும். நன்கு கொதிக்க வைக்க வேண்டும். சர்க்கரை கெட்டி ஆகாமல் இருப்பதற்காக அதில் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்க விட வேண்டும்.
- 5
பூசணிக்காய் நன்கு கொதித்து கண்ணாடி போல் இருக்க வேண்டும் ஒரு கரண்டியை வைத்து பார்த்தால் ஒரு புறத்தில் இருக்கிறது மறுபுறத்தில் தெரியவேண்டும் அதுதான் சரியான பதம். இப்படி வந்தால் அடுப்பை அணைத்து எடுத்து வைத்து விடலாம்.
- 6
வேறொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் பால் மற்றும் மில்க் மெய்டு சேர்த்து கெட்டியாகும் வரை கிண்ட வேண்டும். தேவைப்பட்டால் சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம் ஆனால் அப்படி சேர்த்தால் பால் அதிகமாக சேர்க்க வேண்டும் அதுமட்டுமில்லாமல் மிகுந்த நேரம் கிண்ட வேண்டும். நன்கு கெட்டியாகி வந்தால் உள்ளே வைக்க வேண்டிய கோவா ஸ்டஃப்பிங் தயார். இதில் நட்ஸும் சேர்த்துக்கொள்ளலாம்.
- 7
இப்பொழுது நாம் கொதிக்க வைத்த பூசணிக்காயை ஒவ்வொன்றாக எடுத்து கையில் வைத்து சிறிதளவு கோவாவை வைத்து மடித்துக் கொண்டு அதில் ஓர் லவங்கத்தை வைக்க வேண்டும். மடிப்பை பிரியாமல் இருப்பதற்காக தான் லவங்கத்தை நான் பயன்படுத்துகிறேன். உங்களுக்கு வேண்டுமானால் நீங்கள் அப்படியே மடித்து கூட வைத்துக் கொள்ளலாம். இது மிகவும் ருசியாக இருக்கும் இதை நீங்களும் செய்து பாருங்கள்.
Similar Recipes
More Recipes
























கமெண்ட்