மணமணக்கும் மட்டன் வெள்ளை பிரியாணி(FlavourfulMuttonWhiteBiriyani)

#magazine4
வித்தியாசமான முறையில், செய்யப்பட்ட மட்டன் வெள்ளை பிரியாணி.. அருமையான மணமும் ருசியும் கொண்டது..
மணமணக்கும் மட்டன் வெள்ளை பிரியாணி(FlavourfulMuttonWhiteBiriyani)
#magazine4
வித்தியாசமான முறையில், செய்யப்பட்ட மட்டன் வெள்ளை பிரியாணி.. அருமையான மணமும் ருசியும் கொண்டது..
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மட்டனை சுத்தம் செய்து வைக்கவும். 2 கப் பாஸ்மதி அரிசியை நன்றாக சுத்தம் செய்து, 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
- 2
3 டேபிள்ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது, 3 டேபிள்ஸ்பூன் பச்சைமிளகாய் விழுது, 3 டேபிள்ஸ்பூன் தயிர், பொடியாக நறுக்கிய புதினா மற்றும் கொத்தமல்லி இலை, அரை எலுமிச்சை பழம், தேவையான அளவு உப்பு ஆகியவை மட்டனில் சேர்த்து நன்றாக பிசைந்து 30 நிமிடங்கள் கண்டிப்பாக ஊற வைக்கவும்.
- 3
குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, சீரகம் சேர்த்து பொரிந்ததும், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கி, மசாலாவுடன் ஊறவைத்த மட்டனை சேர்த்து நன்றாக தண்ணீர் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
- 4
தேவைப்பட்டால் அரை கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி வைத்து 20 நிமிடங்களுக்கு விசில் விட்டு, நன்றாக வேக விடவும். மட்டன் நன்றாக மிருதுவாக வெந்து வரும்.
- 5
பிறகு 10 முந்திரிப்பருப்பை பேஸ்ட்டாக அரைத்து அதில் சேர்த்து வதக்கி வைக்கவும்.
- 6
பிறகு வாணலியில் 5 கப் தண்ணீரை கொதிக்க வைத்து பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, நல்லெண்ணெய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விட்டு, ஊற வைத்த அரிசியை சேர்த்து, அரை எலுமிச்சம்பழத்தை பிழிந்து விடவும்.
- 7
சாதம் முக்கால் பங்கு வரை வெந்தால் மட்டும் போதும். ஒரு அரிசியை கையிலெடுத்து அழுத்தினால் இரண்டாக உடைய வேண்டும்.. மசியும் வரை வேகக் கூடாது.
பிறகு ஒரு வடிதட்டில் நீரை வடித்து வைக்கவும். - 8
அரை மூடி தேங்காயை வைத்து கெட்டியான தேங்காய்ப்பால் ஒன்றரை கப் அளவிற்கு எடுத்து வைக்கவும்.
- 9
பிறகு ஒரு தோசைக்கல்லை சூடாக்கி, அதன்மேல் பிரியாணி செய்வதற்கான பாத்திரத்தை வைத்து நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து, வேகவைத்த பிரியாணி அரிசியை பரவலாக ஒரு அடுக்கிற்கு வைக்கவும்.. உடனே அதன் மேல் ஒரு கரண்டி தேங்காய் பால் சுற்றிலும் ஊற்றவும்.
- 10
பிறகு அதன் மேல் வேக வைத்த மட்டன் கலவையை பரவலாக வைக்கவும். அதன்மேல் வேக வைத்த சாதத்தை வைத்து தேங்காய் பால் சேர்த்து, மேலும் இரண்டு மூன்று அடுக்குகளாக மாற்றி மாற்றி அனைத்தையும் சேர்த்து வைக்கவும். தேங்காய் பாலை முழுவதும் இடையிடையே சேர்க்கவும்.
- 11
பிரியாணி பாத்திரத்தை நன்றாக மூடி வைத்து அதன்மேல் தம் செய்வதற்காக கனமான பொருளை வைக்கவும். 10 நிமிடங்கள் அதிகமான தீயிலும், 10 நிமிடங்கள் மிதமான தீயிலும் வைத்து இறக்கவும்.
- 12
நன்றாக கிளறி விட மட்டன் மற்றும் மசாலா மற்றும் சாதத்துடன் நன்றாகக் கலந்து நல்ல மணமுடன் மட்டன் வெள்ளை பிரியாணி சுவையாக தயார்.. மட்டன் குழம்புடன் சூடாக பரிமாறவும்...😋😋😋
Keywords
Similar Recipes
More Recipes



































கமெண்ட்