ரவா கார பணியாரம் (Rava spicy paniyaaram recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ரவை,தயிர் எல்லாம் எடுத்து தயாராக வைக்கவும்.
- 2
வெங்காயம்,மிளகாய்,மல்லி இலை, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
- 3
ஒரு பௌலில் ரவை சேர்த்து, அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய்,மல்லி இலை,கறிவேப்பிலை எல்லாம் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 4
பின்னர் தேவையான அளவு உப்பு,தயிர் சேர்த்து நன்கு கலந்து விடவும். இட்லி மாவு பதத்தில் வருவதருக்கு கொஞ்சம் மோர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 5
பின்னர் பணியாரம் தவாவை ஸ்டவ்வில் வைத்து சூடானதும், பணியாரக் குழியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,தயாராக வைத்துள்ள மாவை சேர்த்து வேக வைக்கவும்.
- 6
இரண்டு நிமிடங்கள் விட்டு திருப்பிப் போடவும்.
- 7
மிதமான சூட்டில் வைத்து மேலும் ஒரு நிமிடம் வேக வைக்கவும்.பின்னர் எடுத்தால் ரவா பணியாரம் தயார்.
- 8
தயாரான ரவா பணியாரத்தை எடுத்து ஒரு பரிமாறும் தட்டில் வைக்கவும்.
- 9
இப்போது மிகவும் சுவையான மொறு மொறு ரவா பணியாரம் சுவைக்கத்தயார்.
Keywords
Similar Recipes
More Recipes









கமெண்ட் (9)