முட்டை கீமா மசாலா(egg kheema masala recipe in tamil)

எங்கள் வீட்டில் குட்டீஸ் விரும்பி சாப்பிடும் முட்டை மசாலா.. சாதம், சப்பாத்திக்கு ஏற்ற சுலபமாக செய்யக் கூடிய மசாலா.
முட்டை கீமா மசாலா(egg kheema masala recipe in tamil)
எங்கள் வீட்டில் குட்டீஸ் விரும்பி சாப்பிடும் முட்டை மசாலா.. சாதம், சப்பாத்திக்கு ஏற்ற சுலபமாக செய்யக் கூடிய மசாலா.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் செய்ய தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் எடுத்து வைத்துள்ள பெரிய வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். வேக வைத்த முட்டையை துருவி எடுத்து வைத்துக் கொள்ளவும். இப்பொழுது ஒரு அடுப்பில் வாணலி வைத்து காய்ந்ததும் 2 டீஸ்பூன் எண்ணை விட்டு சூடானதும் அதில் மிளகு சீரகம் சேர்த்து பொரிய விடவும். பின்னர் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் கறிவேப்பிலை பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 2
வெங்காயம் நன்றாக வதங்கிய பின்பு துருவிய இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக மசியும் வரை வதக்கவும். இப்பொழுது எடுத்து வைத்துள்ள பொடி வகைகள் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து 2 நிமிடம் நன்றாக ஆயிலில் வதக்கி விடவும். பின்னர் துருவிய முட்டையை சேர்த்து நன்றாக ஆயில் ஒரு நிமிடம் வதக்கி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கி விடவும்.
- 3
இப்பொழுது உப்பு சரிபார்த்து ஒரு நிமிடம் மட்டும் நன்றாக வதக்கி ஒரு டீஸ்பூன் மிளகு தூள் சிறிதளவு கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். இப்போது சுவையான முட்டை கீமா மசாலா தயார். நன்றி.ஹேமலதா கதிர்வேல்.
Keywords
Similar Recipes
More Recipes











கமெண்ட் (2)