சமையல் குறிப்புகள்
- 1
முதலில் காடை முட்டையை உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து 10நிமிடம் வேக வைத்து எடுத்து கொள்ளவும். பின்னர் முட்டையின் ஓட்டை நீக்கி விட்டு ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் 1/4ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து முட்டையை 2நிமிடம் வறுத்து எடுத்து கொள்ளவும்.
- 2
அதே போல் ஒரு வெறும் வாணலியில் 1/2ஸ்பூன் மிளகு, மற்றும் 1/2ஸ்பூன் சோம்பு சேர்த்து 2நிமிடம் வறுத்து அதை பவுடராக அரைத்து எடுத்து வைக்கவும். பின்னர் முட்டை வறுத்த கடாயில் மேலும் சிறிது எண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் சோம்பு, பட்டை, கிராம்பு, அண்ணாசிப்பூ சேர்த்து தாளிக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வெங்காயம் நன்கு நிறம் மாறும் வரை வதக்கவும்.
- 3
பின்னர் நீள வாக்கில் நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டை சேர்த்து 1நிமிடம் வதக்கவும். (இஞ்சி பூண்டு விழுது சேர்க்க கூடாது விரும்பினால் இஞ்சி பூண்டை தட்டி சேர்க்கலாம்). பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும். பின்னர் மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் சிறிது தண்ணீர் சேர்த்து மூடி எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விடவும்.
- 4
பின்னர் முட்டையை சேர்த்து 1நிமிடம் கிளறவும். பின்னர் வறுத்து பொடி செய்துள்ள மிளகு சோம்பு தூளை சேர்த்து நன்கு தண்ணீர் சுண்டி தொக்கு பதம் வரும் வரை கிளறி நறுக்கிய கொத்த மல்லி தூவி இறக்கவும்.
- 5
காடை அதிக மருத்துவ குணம் நிறைந்தது மேலும் சுவையும் அதிகம் மறக்காமல் தொக்கு செய்த கடாயில் சிறிது சாதம் சேர்த்து கடாய் சாதம் ருசிக்கவும். அருமையாக இருக்கும். இந்த காடை தொக்கு சாதம், சப்பாத்தி, இட்லி, தோசை, ரசம் சாதம், சாம்பார் சாதம் அனைத்திற்கும் ஏற்றது.
Similar Recipes
-
காடை முட்டை மாஸ் (Kaadai muttai mass recipe in tamil)
காடை முட்டை எலும்பிற்கு அதிக பலத்தை ஏற்படுத்தும் வயதானவர்கள் சாப்பிட்டு வந்தால் கால் வலி மூட்டு வலி குறையும்.. அதிக புரோட்டின் நிறைந்த காடை முட்டையை குழந்தைகளுக்கும் கொடுத்து வரலாம்.. Raji Alan -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
முட்டை தொக்கு(egg thokku recipe in tamil)
#made3 முட்டை இருந்தா மதிய உணவு நேரத்துல சத்தமே வராதுங்க 😜😜😜😜 Tamilmozhiyaal -
-
செட்டிநாடு முட்டை குழம்பு(chettinadu muttai kulambu recipe in tamil)
#GA4காரசாரமான சுலபமான செட்டிநாடு ஸ்டைல் முட்டை குழம்பு. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
மட்டன் எலும்பு சூப் (Mutton elumbu soup recipe in tamil)
இந்த சூப் உடம்புக்கு மிகவும் நல்லது சளி பிடித்தவர்களுக்கு இந்த சூப் செய்து சூடாக கொடுத்தால் சளி தொந்தரவுகள் நீங்கும் #GA4#week3 mutharsha s -
-
-
-
More Recipes
கமெண்ட் (2)