சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து நன்றாக வறுத்து ஆறிய பிறகு மிக்ஸியில் சிறிது தண்ணீர் விட்டு மையாக அரைத்து தனியாக வைக்கவும்
- 2
குக்கரில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் சின்ன வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் நன்றாக வதக்கவும் பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போன பிறகு ஒன்று இரண்டாக புதினா கொத்தமல்லியை அரைத்து அதில் சேர்த்து வதக்கவும் பிறகு தக்காளி சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்கவும்
- 3
மட்டனை சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் நன்றாக வதக்கவும்... அதன் பிறகு இதில் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் தனியாத்தூள் மட்டன் மசாலா தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து ஒரு கப் அளவிற்கு தண்ணீர் விட்டு வேகவிடவும் (5 விசில் விடவும்)
- 4
மட்டன் நன்றாக வெந்த பிறகு அரைத்த மசாலா கலவையை இதனுடன் சேர்த்து மீண்டும் ஒரு கப் அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து ஒரு விசில் மிதமான தீயில் வேக வைத்து எடுக்கவும்
- 5
இறுதியாக கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும் சுவையான மட்டன் சால்னா தயார்
Similar Recipes
More Recipes



















கமெண்ட் (3)