கண்டன்ஸ்டு மில்க் குலோப் ஜாமுன்(condensed milk gulab jamun recipe in tamil)

கண்டன்ஸ்டு மில்க் குலோப் ஜாமுன்(condensed milk gulab jamun recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாத்திரத்தில் கண்டன்ஸ்டு மில்க் பால் பேக்கிங் சோடா சேர்க்கவும்
- 2
இத்துடன் நெய் சேர்த்து நன்றாக கலக்கவும் பிறகு சிறிது சிறிதாக மைதா மாவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் இது பார்ப்பதற்கு சற்று பிசுபிசுப்பாக இருக்க வேண்டும்
- 3
கலந்த கலவையில் இருந்து சிறு சிறு உருண்டைகளாக பிரித்து நன்றாக விரிசல் இல்லாமல் உருட்டி 10 நிமிடம் தனியாக வைக்கவும்
- 4
மற்றொரு பாத்திரத்தில் சர்க்கரை தண்ணீர் குங்குமப்பூ ஏலக்காய்த்தூள் சேர்த்து பிசுபிசுப்பு பதம் வரும் வரை நன்றாக கலக்கவும் பிறகு இதில் எலுமிச்சை சாறு சேர்த்து அடுப்பை அணைக்கவும்
- 5
கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் மிதமான தீயில் சிறு சிறு உருண்டைகளாக பொரித்தெடுக்கவும், மிதமான மற்றும் குறைந்த தீயில் இருக்க வேண்டும் உருண்டைகள் பொரித்து வரும் வரை கரண்டி உபயோகப்படுத்தாமல் ஒரு ஸ்பூன் உதவி கொண்டு வெளிப்பக்கம் கிளறிக்கொண்டே இருக்கவும் அப்போதுதான் உருண்டைகள் நன்றாக உருண்டு எல்லா பக்கமும் வெந்து வரும் இப்போது பொன்னிறமான உடன் உருண்டைகளை எடுக்கவும்
- 6
உருண்டைகள் சூடாக இருக்கும் பொழுதே சர்க்கரை பாகில் சேர்த்து 2 மணி நேரம் கழித்து பரிமாறவும்
- 7
சுவையான அட்டகாசமான கண்டன்ஸ்டு மில்க் குலோப்ஜாமுன் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
























கமெண்ட் (7)