சமையல் குறிப்புகள்
- 1
முதலில் இறால் ஐ தலையோடு சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம் பொடியாக நறுக்கி கொள்ளவும். கத்தரிக்காயை நீளவாக்கில் வெட்டி வைக்கவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் புளியை தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும். பின்பு அதனுடன் தக்காளி பச்சை மிளகாய் மீன் குழம்பு பொடி, உப்பு சேர்த்து கட்டியில்லாமல் கலந்து கொள்ளவும்.
- 3
அடுப்பைப் பற்றவைத்து ஒரு கடாயில் ஊற்றி கரைத்து வைத்த கலவை மற்றும் கத்தரிக்காய் போட்டு கத்தரிக்காய் வெந்தவுடன் இறால் போட்டு வெந்ததும் இரண்டு கொதி வந்தவுடன் இறக்கவும்.
- 4
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்து பருப்பு பொரிந்தவுடன் வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதனுடன் கருவேப்பிலை சேர்த்து இறக்கி வைத்த இறால் குழம்புடன் தாளித்து ஊற்றவும்.
- 5
சுவையான இறால் குழம்பு தயார்.சூடான சாதத்துடன் பரிமாறலாம்.
Top Search in
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16024993











கமெண்ட்