மொச்சை சிந்தாமணி(mochai chinthamani recipe in tamil)

கிராமங்களில் மிகவும் பிரபலமான காலை நேர உணவு இதனுடன் தேங்காய் சட்னி தொட்டுக் கொண்டு சாப்பிட அட்டகாசமாக இருக்கும் மழைக்காலங்களில் மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிடலாம் மிகுந்த புரதம் சத்து நிறைந்தது குறைந்த பொருட்களுடன்மிகவும் சுலபமாக செய்து விடலாம்# birthday1

சமையல் குறிப்புகள்
- 1
100 கிராம் அளவு வெள்ளை மொச்சை பயறு எடுத்து கழுவி சுத்தம் செய்து இரவே ஊற வைக்கவும் ஊறிய மொச்சைப் பயறை 4 விசில் வரும் வரை குக்கரில் வேக விடவும்
- 2
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சீரகம் பொரிய விடவும் பின் நீளமாக நறுக்கிய வெங்காயம் இரண்டு நேராக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும் வெங்காயம் நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள் சிறிதளவு சேர்க்கவும்
- 3
இவை அனைத்தையும் ஒன்றாக கிளறி வேக வைத்து இறக்கிய மொச்சைப் பயறை குறைந்த அளவு தண்ணீருடன்அதில் சேர்க்கவும் பின்னர் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
- 4
ஒரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் கடலை மாவு கட்டியில்லாமல் தண்ணீர் ஊற்றி கலக்கவும் மொச்சை பயறு கலவையில் தண்ணீர் வற்றியதும் இந்த கடலை மாவு கலவையை அதில் ஊற்றவும்
- 5
நன்கு கலந்து அடிப்பிடிக்காமல் மிதமான தீயில் கெட்டியான பதம் வரும் வரை கிளறி விடவும் அருமையான மொச்சை சிந்தாமணி சுடச் சுட தயார்
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்