ரோட் சைட் காளான் ஹோம் ஸ்டைலில் (முட்டை காளான்)🤤🤤😋(roadside kalan recipe in tamil)

சட்டுனு சூடா சுவையாக சாயங்கால ஸ்நாக் ஆக சுலபமாக செய்து சாப்பிடலாம் . கடைகளில் வாங்கும் போது உப்பு, எண்ணெய், காரம் என அனைத்தும் அதிகமாக இருக்கும் நாம் வீட்டில் செய்யும் போது விருப்பத்திற்கு ஏற்ப செய்து கொடுக்கலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஆரோக்கியமான உணவு.

சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கி கொள்ள வேண்டும்.
- 2
அதில் காளான் சேர்த்து இரண்டு நிமிடம் மூடி போட்டு வேக வைக்க வேண்டும் பிறகு அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் உப்பு சேர்த்து கிளரி கொள்வோம்.
- 3
ஒரு பௌலில் சோள மாவு கால் கப் தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் கலந்து ஊற்றி அடிபிடிக்காமல் கிளறவேண்டும். இந்த சமயத்தில் சோயா சாஸ், டொமேட்டோ சாஸ், சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கிளற வேண்டும் தண்ணீர் வற்றி கெட்டியான பதம் வந்தவுடன், 2 முட்டையை ஊற்றி அதில் மிளகுத்தூள் முட்டைக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து முட்டை வேகும் வரை கிளறிக்கொண்டே இருக்கவேண்டும்.
- 4
கடைசியாக பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லி இலை ஆகியவற்றைத் தூவி சூடாகப் பரிமாறலாம். சூடாக சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.😋😋
Keywords
Similar Recipes
More Recipes
- கிராமத்து வெண்டைக்காய் காரக்குழம்பு (village style ladys finger spicy gravy in Tamil)
- முருங்கைக்கீரை மசால் வடை(murungaikeerai masal vadai recipe in tamil)
- சாப்ட் இட்லி(soft idly recipe in tamil)
- பேரிட்சை தேங்காய் பால் ஷேக்(dates with coconut milk shake recipe in tamil)
- கிராமத்துஸ்டைல்நாட்டுசர்க்கரை சாயா(village style tea recipe in tamil)

கமெண்ட்