தபேலி மசாலா பாவ் பன்(dabeli masala pav bun recipe in tamil)

தபேலி மசாலா பாவ் பன்(dabeli masala pav bun recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் தனியா.சீரகம்.சோம்பு.மிளகு.பட்டை.கிராம்பு.ஏலம்.கொப்பரை.பிரியாணி இலை சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும்.
- 2
இவை அனைத்தும் ஆறியதும் உப்பு.சீனி.மிளகாய் தூள் தலா ஒரு ஸ்பூன் சாட்மசாலா தூள் சேர்த்து மிக்சியில்அரைத்து பொடியாக்கவும்இது தபேலி மசாலா.
- 3
உருளைக்கிழங்கை வேக வைத்து துருவி வைக்கவும்.பச்சை சட்னி.புளி சட்னி தயார் செய்து தனித்தனியே வைக்கவும்.
- 4
ஒரு கடாயில்.இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் தபேலி மசாலா சேர்த்து கால் கப்.புளிச்சட்னி.கால் கப் தண்ணீர் ஊற்றிஇலைசாக கொதிக்க விடவும்.
- 5
அதில் துருவிய கிழங்கை சேர்த்து கலந்து விடவும்.கலவை ஆறவிட்டு ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும்.
- 6
அந்த தபேலி மசாலா மேல் சிறிது வெங்காயத் துருவல்.தேங்காய் துருவல்.கொத்தமல்லி இலை.ஓமப்பொடி.மாதுளை முத்துக்கள் தூவி ரெடியாக வைக்கவும்.
- 7
பன்னை இலேசாக பிளந்து புளிச்சட்னி.பச்சை சட்னியை தடவவும். அதனுள் சிறிது வெங்காயத்துருவல் சேர்க்கவும்.
- 8
மேலும் அதற்குள்ளே தபேலி மசாலாவை ஸ்டஃப் செய்து ஓமப்பொடியில் புரட்டி எடுக்கவும்.
- 9
தோசைக்கல்லில் பட்டர் சேர்த்து பன்களை இரண்டு புறமும் இலேசாக சுட்டு புரட்டி எடுத்து பரிமாறவும்.
- 10
குஜராத்தில் பிரபலமான
ஸ்டீரிட் ஃபுட் தபேலி மசாலா பாவ் பன் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes




















கமெண்ட்