பன்னீர் பட்டர் கிரேவி(paneer butter gravy recipe in tamil)

சப்பாத்தி பூரி இட்லி தோசை இவற்றுக்கு சைடிஷ் ஆக பன்னீர் பட்டர் கிரேவி மிகவும் டேஸ்டாக இருக்கும் ஹோட்டலில் செய்வதை போன்று எளிமையான முறையில் வீட்டிலும் செய்யலாம்.
பன்னீர் பட்டர் கிரேவி(paneer butter gravy recipe in tamil)
சப்பாத்தி பூரி இட்லி தோசை இவற்றுக்கு சைடிஷ் ஆக பன்னீர் பட்டர் கிரேவி மிகவும் டேஸ்டாக இருக்கும் ஹோட்டலில் செய்வதை போன்று எளிமையான முறையில் வீட்டிலும் செய்யலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் 50 கிராம் வெண்ணை சேர்க்கவும் வெண்ணை உருக ஆரம்பிக்கும் பொழுது நறுக்கிய பல்லாரி வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்
- 2
வெங்காயம் சிறிது வதங்கியதும் நறுக்கி வைத்த தக்காளியை சேர்த்து வதக்கவும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி விட்டு பச்சை வாசனை போனதும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்
- 3
இப்பொழுது வீட்டில் வைத்திருக்கும் மசாலா பொடி இரண்டு ஸ்பூன் கால் டீஸ்பூன் கறிமசால் பொடி சேர்த்து நன்கு கிளறிவிட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும் முந்திரியும் தேங்காயும் எடுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும்
- 4
கொதிக்கின்ற மசாலா கலவையில் அரைத்த முந்திரி தேங்காய் விழுதை சிறிது தண்ணீர் கலந்து ஊற்றி கலந்து விடவும் இரண்டு நிமிடம் கொதிக்க விட்டு பன்னீர் துண்டுகளை அதில் சேர்க்கவும் பன்னீர் துண்டுகள் சேர்த்து கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது உப்பு சேர்த்து நன்கு கிளறி இரண்டு நிமிடம் விடவும்
- 5
இப்பொழுது கிரேவி கொஞ்சம் கெட்டியாகும் மீதி இருக்கும் வெண்ணையை அதில் சேர்க்கவும்
- 6
வெண்ணை சேர்த்து அதிக நேரம் அடுப்பில் வைக்கத் தேவையில்லை ஒரு நிமிடம் கலந்து விட்டு இறக்கி விடவும் இப்பொழுது மிக மிக அருமையான பன்னீர் பட்டர் கிரேவி சூடான சப்பாத்தியுடன் சாப்பிட தயார்
Keywords
Similar Recipes
More Recipes


















கமெண்ட்