முருங்கை கீரை சூப்(murungai keerai soup recipe in tamil)

இது மழைக்காலம் என்பதால் அடிக்கடி நோய் வாய்ப்படும் சூழல் உள்ளது. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இதனால் உடலில் ரத்த உற்பத்தியும் குறையும். இந்த வேளையில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் ரத்த உற்பத்தியை பெருக்கவும் முருங்கை முக்கிய பங்கு வகிக்கிறது. கீரையை பொரியலாகவோ சூப் செய்தும் சாப்பிடலாம். பொரியல் செய்து சாப்பிட விருப்பம் இல்லாதவர்கள் சூப் செய்து சாப்பிடலாம். மேலும் இது உடலில் உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது. கர்ப்பிணி தாய்மார்கள் இரண்டு நாள்களுக்கு ஒரு முறை இந்த சூப் எடுத்துக் கொள்ளலாம். தாயின் உடலில் ரத்த உற்பத்தியை அதிகரித்து வயிற்றில் உள்ள குழந்தைக்கும் ரத்த ஓட்டம் சீராக வைக்க உதவுகிறது. மகத்தான இந்த முருங்கை கீரை சூப் செய்முறையை கீழே காணலாம். #Sr

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் முருங்கை இலையை நன்றாக அலசி வைத்துக் கொள்ள வேண்டும்.
- 2
ஒரு வானலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்ற வேண்டும்.
- 3
எண்ணெய் காய்ந்ததும் சீரகம் சேர்த்து வதக்க வேண்டும்.
- 4
சீரகம் வதங்கியதும் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.
- 5
வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.
- 6
தக்காளி வதக்கியதும் முருங்கை இலைகளை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்க வேண்டும்.
- 7
பின் தேவையான அளவு உப்பு சேர்த்து மூன்று கப் அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்தால் சூப் ரெடி!
- 8
சூடாக குடித்தால் மழைக்காலம் தொண்டைக்கு இதமாக இருக்கும்.
- 9
சிறுவர்களுக்கு கசப்பால் குடிக்க மறுத்தால் சிறிது வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்து கொடுக்கலாம்.
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்