முட்டை பிரியாணி(egg biryani recipe in tamil)

முட்டை பிரியாணி(egg biryani recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முட்டையை வேகவைத்து தோல் உரித்து கீறல் போட்டுக் கொள்ளவும். இதோடு கொஞ்சம் உப்பு மிளகாய் தூள் மஞ்சள் தூள் கலந்து ஐந்து நிமிடம் வைக்கவும். குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும் முட்டைகளை இதில் வைத்து திருப்பி விட்டு லேசாக வறுத்து வெளியே எடுத்து ஒரு தட்டில் வைக்கவும்.
- 2
மீதமுள்ள எண்ணெயில் பிரியாணி இல்லை கல்பாசி அன்னாசி பூ சேர்த்து தாளிக்கவும். இதில் நறுக்கிய வெங்காயம் கொஞ்சமாக கொத்தமல்லி புதினா இலைகள் சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுது நறுக்கிய தக்காளி பச்சை மிளகாய் சேர்த்து தக்காளி மசிய வதக்கவும்.
- 3
மசிந்ததும் மிளகாய் தூள் மஞ்சள் தூள் மல்லித்தூள் மற்றும் தயிர் சேர்த்து கலந்து விடவும். இதற்கு தேவையான அளவு தண்ணீர் கரம் மசாலாத்தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ளவும். 20 நிமிடம் ஊற வைத்து தண்ணீர் வடித்து அரிசியை குக்கரில் சேர்க்கவும். கடைசியில் எலுமிச்சை சாறு பிழிந்து விடவும். மீதமுள்ள மல்லி புதினா இலைகளை நறுக்கி சேர்த்து, இதற்கு மேல் வருத்த முட்டைகளை வைத்து குக்கரை மூடி ஆவி வந்தபின் விசில் போட்டு சிறு தீயில் 10 நிமிடம் வேக விடவும்.
- 4
விசில் அடங்கிய பின் குக்கரை திறந்து முட்டையை தனியாக எடுத்து அதன் பிறகு சாதத்தைக் கிளறி அதற்கு பிறகு பரிமாறலாம்.
Keywords
Similar Recipes
More Recipes












கமெண்ட் (2)