* பஞ்சாபி ஷோலே படூரா *(punjabi chole batura recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#PJ
இது பஞ்சாபி ஸ்பெஷல் சைட் டிஷ். சப்பாத்தி, நாண், புல்காவிற்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும்.

* பஞ்சாபி ஷோலே படூரா *(punjabi chole batura recipe in tamil)

#PJ
இது பஞ்சாபி ஸ்பெஷல் சைட் டிஷ். சப்பாத்தி, நாண், புல்காவிற்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி
6 பேர்
  1. 2 கப்வெள்ளை சென்னா
  2. 2மீடியம் சைஸ் வெங்காயம்
  3. 2மீடியம் சைஸ் தக்காளி
  4. 1 டீ ஸ்பூன்மாதுளை முத்துக்கள்
  5. 1 டீ ஸ்பூன்காய்ந்த நெல்லிக்காய் துண்டுகள்
  6. 1 டீ ஸ்பூன்பேக்கிங் சோடா
  7. 1 டீ ஸ்பூன்சீரகம்
  8. 1 டேபிள் ஸ்பூன்இஞ்சி, பூண்டு இடித்தது
  9. 1 டீ ஸ்பூன்இஞ்சி சீவியது
  10. 1டீ ஸ்பூன்சீரகத் தூள்
  11. 1 டீ ஸ்பூன்மிளகு தூள்
  12. 1 ஸ்பூன்தனியா தூள்
  13. 2கீறின ப.மிளகாய்
  14. 1 டேபிள் ஸ்பூன்சென்னா மசாலாதூள்
  15. சிறு துண்டுபட்டை
  16. 2கிராம்பு
  17. தலா 1பச்சை ஏலக்காய், கருப்பு ஏலக்காய்
  18. 1 டீ ஸ்பூன்ம.தூள்
  19. ருசிக்குஉப்பு
  20. 1/4 கப்எண்ணெய்
  21. தேவையான அளவுதண்ணீர்
  22. 1 டேபிள் ஸ்பூன்நறுக்கின கொத்தமல்லி தழை

சமையல் குறிப்புகள்

1/2 மணி
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். வெள்ளை சென்னாவை, கொதிக்கும் தண்ணீர் விட்டு, 6 மணி நேரம், ஊற வைக்கவும்.இஞ்சி, பூண்டை இடித்துக் கொள்ளவும்.இஞ்சியை சீவிக் கொள்ளவும்.நறுக்கின 2 வெங்காயம், மாதுளை முத்துக்களை மிக்ஸி ஜாரில் போட்டு மைய அரைக்கவும். ப.மிளகாயை கீறிக் கொள்ளவும்.

  2. 2

    மிக்ஸி ஜாரில், தக்காளியை போட்டு மைய அரைக்கவும்.

  3. 3

    மிளகு, சீரகத்தை, மிக்ஸி ஜாரில் போட்டு, தனித்தனியாக நன்கு பொடித்துக் கொள்ளவும்.

  4. 4

    நெல்லிக்காய் துண்டுகளை வேக வைத்து, வெயிலில் நன்கு காய வைத்துக் கொள்ளவும்.

  5. 5

    அடுப்பை மிதமான தீயில் வைத்து, குக்கரில், ஊறின சென்னா, ம.தூள், உப்பு, ஆம்லா தூள், பேக்கிங் சோடா, தண்ணீர் சேர்த்து, மூடி, 4 விசில் வைத்து வேக விட்டு ஆறினதும், பௌலில் எடுக்கவும்.

  6. 6

    அடுப்பை மிதமான தீயில் வைத்து கடாயில் 1/4 கப் எண்ணெய் விட்டு காய்ந்ததும், சீரகம் சேர்த்து பொரிந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், போட்டு வறுபட்டதும், அரைத்த, வெங்காய, மாதுளை விழுதை போடவும்.

  7. 7

    பச்சை வாசனை போனதும், இடித்த இஞ்சி, பூண்டு, விழுது, ப.மிளகாய், சீரகத் தூள், மிளகு தூள், தனியா தூள், போட்டு வதக்கவும். பிறகு சீவின இஞ்சி, சென்னா மசாலா தூள், போட்டு எண்ணெய் பிரிந்து வந்ததும், அரைத்த தக்காளி விழுதை போட்டு, நன்கு வதக்கியதும்,வெந்த சென்னாவை போட்டு, 5 நிமிடம் கொதித்ததும், அடுப்பை நிறுத்தி விடவும்.

  8. 8

    பிறகு மேலே கொத்தமல்லி தழையை போட்டு இறக்கவும்.

  9. 9

    இறக்கியதும் பௌலுக்கு மாற்றவும்.இப்போது சுவையான, வித்தியாசமான, *பஞ்சாபி ஷோலே படூரா* தயார். இது, சப்பாத்தி, நாண், புல்காவிற்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும்.

  10. 10

    குறிப்பு:- எனக்கு அதிகம் புகைப்படம் எடுக்க முடியவில்லை.முடிந்த அளவு எடுத்தேன். இந்த படூராவிற்கு முக்கியம் காய்ந்த நெல்லித் துண்டுகள் தான். காய்ந்த நெல்லிக்காய், கடைகளில் கிடைக்கும்.நான் இதை செய்து பார்த்ததில், சுவை மிகவும் நன்றாக இருந்தது. இதில் கொடுத்துள்ள செய்முறைபடி செய்து பார்த்து அசத்தவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes