கேரளா ஸ்டைல் கடலை கறி(kerala style kadala curry recipe in tamil)

கேரளாவின் மிக முக்கியமான உணவு இது. இதை அவர்கள் புட்டு ஆப்பம்,இடியாப்பம் போன்றவற்றிற்கு பிரதானமான side dish ஆக எடுத்துக் கொள்வார்கள். கேரளாவின் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்று.
கேரளா ஸ்டைல் கடலை கறி(kerala style kadala curry recipe in tamil)
கேரளாவின் மிக முக்கியமான உணவு இது. இதை அவர்கள் புட்டு ஆப்பம்,இடியாப்பம் போன்றவற்றிற்கு பிரதானமான side dish ஆக எடுத்துக் கொள்வார்கள். கேரளாவின் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்று.
சமையல் குறிப்புகள்
- 1
மேல் கூறிய தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் வெங்காயம் பட்டை சோம்பு, சீரகம் மிளகு கிராம்பு மற்றும் மஞ்சள் தூள் மிளகாய் தூள், மல்லித்தூள் தேங்காய் அனைத்தையும் சேர்த்து வறுக்கவும். கருகாமல் வாசம் வர வறுத்து எடுத்து தனியாக ஆறவிடவும். மிக்ஸியில் இரண்டு ஸ்பூன் தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக கொள்ளவும். தக்காளி வெங்காயத்தை பொடியாக அரிந்து கொள்ளவும். முதல் நாள் இரவே ஊறவிட்ட கருப்பு கொண்டை கடலையை ஏழு எட்டு சவுண்டு விட்டு வேக வைக்கவும்
- 2
ஒரு டம்ளர் கடலைக்கு ஒன்றரை டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து வேகவிட்டு தண்ணீரை வடித்துக் கொள்ளாமல் அப்படியே வைத்துக் கொள்ளவும்.
- 3
ஒரு அடி கனமான வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்தது காய்ந்தவுடன் கடுகு ஒரு ஸ்பூன் கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து பொரிய விட்டு வெங்காயத்தை வதக்கவும் வெங்காயம் ஓரளவு வதங்கிய பிறகு தக்காளியை சேர்த்து வதக்கவும். பிறகு இவற்றில் ஆட்டிய தேங்காய் விழுதை சேர்த்து நன்கு வதக்கவும் இப்போது தேவையான அளவு தூள் உப்பு சேர்த்து வதக்கவும். என்னை நன்கு பிரிந்து மேலே வரும்.
- 4
அதன் பின்பு தண்ணியுடன் வேக வைத்த கடலையும் சேர்த்து கலந்து விட்டு கொதிக்க விடவும். தண்ணீர் தேவை என்றால் மிக்ஸி கழுவிய தண்ணீரை சேர்த்துக் கொள்ளலாம். ஐந்து நிமிடம் நன்கு கொதிக்க விட்டு பிறகு கருவேப்பிலை கொத்தமல்லி சேர்த்துக் கொள்ளவும். தேவை என்றால் உப்பு சரிபார்த்து சேர்த்துக் கொள்ளவும். கேரளா கடலை கறி தயார்.
- 5
சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ளலாம் சாதத்திற்கு பிசைந்து சாப்பிடலாம் புட்டு ஆப்பம் இடியாப்பம் போன்றவற்றுக்கு பிசைந்து சாப்பிட சூப்பராக இருக்கும்.
Keywords
Similar Recipes
More Recipes

















கமெண்ட் (2)