பஞ்சாபி ஸ்டைலில் டால் தடுக்கா(Dal dadka in Punjabi' s restaurant style)

பஞ்சாபி ஸ்டைலில் டால் தடுக்கா. சாப்பாட்டுக்கு சப்பாத்தி ரொட்டி இவைகளுடன் சாப்பிட சுவையாக இருக்கும். குறைந்த நிமிடங்களில் சுவையான இந்த பஞ்சாபி ரெஸ்டாரன்ட் ஸ்டைல் டால் டடுக்கா செய்து விடலாம்.. நான் வெறும் பாசிப்பருப்பில் மட்டும் செய்தேன். மைசூர் பருப்பு என்கின்ற மசூர்தாள் இருந்தால் பாசிப்பருப்பு அரை கப் மஜூர் டால் அரைக்கப் சேர்த்து செய்யலாம். இன்னும் சுவையாக இருக்கும்.

சமையல் குறிப்புகள்
- 1
டால் தடுக்காவிற்கு தேவையான மேல் கூறிய அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மிளகாய் இஞ்சி பூண்டு இவைகளையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பருப்பை கழுவி சுத்தம் செய்து இரண்டு கப் தண்ணீர் சேர்த்து அதில் சிறிது எண்ணெய் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வேக விடவும்.
- 2
பருப்பு நன்கு வெந்த உடன் தனியாக எடுத்து வைத்து விடவும். இப்போது ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து அதில் சீரகம் பெருங்காயத்தூள் பிரிஞ்சி இலை சேர்த்து பொரிய விடவும். பிறகு அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும் அதன்பிறகு வெங்காயத்தை சேர்த்து சிவக்க வறுக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியவுடன் மஞ்சள் தூள் வர மிளகாய் தூள், உப்பு தூள், கொத்தமல்லி தூள் இவற்றை சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும். பிறகு தக்காளி கொத்தமல்லி சேர்த்து வதக்கி விடவும்.
- 3
தக்காளி நன்கு வதங்கிய பிறகு அதில் வேக வைத்த பருப்பை சேர்த்து தேவையென்றால் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து விட்டு ஐந்து நிமிடம் மூடி வைத்து வேகவிடவும். பிறகு ஒரு வானவியல் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் சீரகம் பெருங்காயத்தூள், கால் ஸ்பூன் வர மிளகாய் தூள் மற்றும் கருவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து தாளித்து சேர்க்கவும்.. கரம் மசாலாத்தூள் மற்றும் கஸ்தூரி மேத்தியே பருப்பில் சேர்த்து ஒரு கொதி விடவும். கண்சிஸ்டெண்சி தங்களுக்கு தேவைக்கு ஏற்ப தயாரித்துக் கொள்ளவும்
- 4
சூப்பரான பஞ்சாபி ஸ்டைல் டால் த்தடுக்கா ரெடி. நான் சப்பாத்திக்கு டின்னருக்கு செய்தேன்.
Similar Recipes
More Recipes

கமெண்ட்